Maxwell Records: ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் ஓராயிரம் சாதனைகள்..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தனியொரு மனிதனாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்த மேக்ஸ்வெல், இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 8, 2023, 06:27 AM IST
  • மேக்ஸ்வெல் அபார ஆட்டம்
  • இரட்டை சதம் அடித்து அசத்தல்
  • ஆஸ்திரேலிய அணி வெற்றி
Maxwell Records: ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் ஓராயிரம் சாதனைகள்..!  title=

ஆஸ்திரேலிய அணி மோசமான பேட்டிங்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 291 ரன்கள் விளாசிய அந்த அணி. ஆப்கானிஸ்தான் அணியில் ஓப்பனிங் இறங்கி விளையாடிய இப்ராஹிம் ஜத்ரான் 129 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஒருவர் உலக கோப்பையில் அடித்த முதல் சதம் இதுவாகும். இதனையடுத்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது

ஆப்கானிஸ்தான் கொண்டாட்டம்

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7  விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. களத்தில் மேக்ஸ்வெல்லும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸூம் இருந்தனர். இனி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியாது என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே நினைத்துக் கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தான் டிரெஸ்ஸிங் ரூமில் கொண்டாட்டம் கூட தொடங்கியது. ஆனால், மேக்ஸ்வெல் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு முனையில் பாட் கம்மின்ஸ் தடுப்பாட்டம் ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள, மறுமுனையில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் மேக்ஸ்வெல்.

மேலும் படிக்க  | மாயாஜாலம் காட்டிய மேக்ஸ்வெல்... வான்கடேவில் ஆஸி., வரலாற்று வெற்றி - அடங்கியது ஆப்கானிஸ்தான்!

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இதனால் தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியா அணி முடிவில் 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றியை பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாசினார் அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். இத்தனைக்கும் அவருக்கு காயம் மற்றும் தசைப்பிடிப்பு பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் களத்தைவிட்டு வெளியேறாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை தனியொரு வீரராக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் படைத்த சாதனைகள்

அத்துடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார் அவர். மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம் தான் சேஸிங்கில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன். இதற்கு முன்பு பாகிஸ்தானின் பஹர் ஜமான், 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்ததே சேசிங்கில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமை மேக்ஸ்வெல் வசம் வந்தது.

52 ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை 11 இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற அனைவரும் தொடக்க வீரராக இறங்கி இரட்டை சதம் அடித்தவர்கள் ஆவர். மேக்ஸ்வெல் மட்டுமே 6-வது வரிசையில் இறங்கி இரட்டை சதம் விளாசியவர்.  மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும். இந்தியாவின் இஷான் கிஷன் கடந்த ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 126 பந்துகளில் 200-ஐ தொட்டதே மின்னல்வேக இரட்டை சதமாக நீடிக்கிறது. 

21 பவுண்டரி, 10 சிக்சருடன் 201 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய வீரர்களில் முதல் இரட்டை சத நாயகன் என்ற அரிய சாதனையை வசப்படுத்தினார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய தரப்பில் ஷேன் வாட்சன் 185 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்கெய்ல் (49 சிக்சர்), இந்தியாவின் ரோகித் சர்மா (45) ஆகியோருக்கு அடுத்த இடத்துக்கு மேக்ஸ்வெல் (43 சிக்சர்) முன்னேறியுள்ளார்.

மேலும் படிக்க | அரையிறுதியில் ஆப்கான்? - சச்சினுக்கு நன்றி சொன்ன இப்ராஹிம் சத்ரான்... ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News