மேக்ஸ்வெல் குற்றச்சாட்டு
நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடிய மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மேக்ஸ்வெல் போட்டியில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் போட்டிகளில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் லைட் ஷோ ஒரு முட்டாள்தனமான யோசனை என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் மேக்ஸ்வெல்” இதே போன்ற லைட் நிகழ்ச்சிகள் ஒருமுறை பெர்த் மைதானத்திலும் பிக் பேஸ் கிரிக்கெட் போட்டியில் இப்போது நடைபெற்றது. அதில் எனக்கு கடுமையான தலைவலி உண்டானது . மேலும் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் தூங்கும்போது எனது கண்களை அந்த ஒளிக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக” தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2024 ஏலம் எங்கு? எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?
முட்டாள்தனமான யோசனை
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய மேக்ஸ்வெல்” இது ஒரு முட்டாள்தனமான யோசனை. கிரிக்கெட் வீரர்களுக்கு இது போன்ற ஒளிக்கு உடனடியாக தங்கள் கண்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. பெர்த் மைதானத்தில் ஒரு விக்கெட் விழுந்தபோது லைட் ஷோ நடைபெற்றது. நான் எதிர் முனையில் இருந்தேன். இருந்தாலும் கண்களை உடனடியாக அந்த வெளிச்சத்திற்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்று” என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
டேவிட் வார்னர் ஆதரவு
மேலும் இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் சக வீரரான டேவிட் வார்னர் மாற்றுக் கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்திருக்கும் அவர்” இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையான ஒன்று. நான் அதனை மிகவும் ரசித்தேன். என்ன ஒரு அருமையான நிகழ்ச்சி. ரசிகர்களுக்கு மிகவும் அருமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாமே ரசிகர்களுக்காகத்தான். உங்களால்தான் நாங்கள் விரும்பிய விஷயங்களை செய்ய முடிகிறது” என பதிவு செய்திருக்கிறார்.
மேலும் மேக்ஸ்வெல் குறித்து பேசியவர்” மேக்ஸ்வெல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது சிறப்பான ஒரு விஷயம் இது அவருக்கு ஒரு ஸ்பெஷல் ஆன தினம். இந்த சதத்தை அவர் புதியதாக பிறந்த தனது குழந்தைக்கு சமர்ப்பித்தார். ஐபிஎல் தொடரின் இப்போதே இதே மாதிரியான ஆடுகளங்களில் விளையாடுவது எப்படி என்பது பற்றி விவாதித்து இருக்கிறோம். இங்கு எப்போதும் டைமிங் மற்றும் ரிதம் முக்கியம்” என தெரிவித்திருக்கிறார் டேவிட் வார்னர்.
மேலும் படிக்க | மைதானத்தில் லேசர் லைட் ஷோ: கடுப்பான மேக்ஸ்வெல், குஷியான வார்னர் - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ