18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 14-ஆவது நாளான இன்று பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு பிரிவில் இந்தியாவின் பிரணாப் பர்தான் மற்றும் ஷிபநாத் சர்க்கார் ஜோடி தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர். இது இந்தியாவுக்கு 15வது தங்க பதக்கம் ஆகும். இவர்கள் எடுத்த மொத்த புள்ளிகள் 384 ஆகும்.
ஆசிய விளையாட்டு போட்டி 2018 பதக்க பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள இந்தியா மொத்தம் 67 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 15 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இன்று மட்டும் இதுவரை இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
India's Pranab Bardhan and Shibhnath Sarkar win gold in Bridge final event pic.twitter.com/gNbp9fHGM1
— ANI (@ANI) September 1, 2018