Latest Cricket News Updates: இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அணி ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சீனியர்கள் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தனர். டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, டி20யில் மட்டுமின்றி, ஓடிஐ மற்றும் டெஸ்ட் அணியிலும் இந்திய அணி பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளது. இந்த நேரத்தில் இந்திய அணியில் தனக்கென்ற இடத்தை எந்த வீரர்கள் பிடிக்கப் போகிறார்கள், சில சீனியர் வீரர்களுக்கு இந்திய அணியில் இருக்கும் எதிர்காலம் என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகின்றன.
ஓரங்கட்டப்படும் கேஎல் ராகுல்?
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலையான இடத்தை பெற்றிருந்த புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி போன்றோருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை எனலாம். அந்த நிலை இனி யாருக்கு வேண்டுமானால் யாருக்கு வேண்டுமானால் ஏற்படலாம். அதில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவர். இந்திய அணியின் ஸ்டார் வீரராக பார்க்கப்பட்ட இவருக்கு இந்திய அணி நிரந்தர இடம் என்பதில்லை என்கிறார்கள்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!
மோசமான பார்மில் கேஎல் ராகுல்
குறிப்பாக, ரிஷப் பண்டின் வருகைக்கு பின் கேஎல் ராகுலின் இடம் என்பது மூன்று பார்மட்டிலும் கேள்விக்குள்ளாகி உள்ளது எனலாம். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலேயே அவருக்கு அணியில் இடமில்லை. ரிஷப் பண்ட் ஒன் டவுனில் இறங்கி அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார். எனவே, டி20இல் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்பவே கடினம்தான். ஓடிஐயில் மிடில் ஆர்டரில் சிறப்பான பேட்டிங்கை வைத்திருந்தாலும் இவரின் சமீபத்திய பார்ம் என்பது கவலையடைய வைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சர்வதேச அரங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் பார்மை வைத்திருக்கவில்லை. டெஸ்டிலும் சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் மிடில் ஆர்டரில் வளர்ச்சி கண்டு வருவதால் கேஎல் ராகுலின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?
இந்தச் சூழலில், கேஎல் ராகுல் அவரது இன்ஸ்டாகிராமில்,"முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன், காத்திருங்கள்" ஸ்டோரி அப்டேட் செய்திருந்தார். எனினும் இந்த ஸ்டோரி அவரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த பதிவா இல்லையா என்பது உறுதியாவதற்கு பல்வேறு வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Is this news true abou#KLRahul @klrahul pic.twitter.com/tQfGOAKbNs
— Neha Kumari (@NeHA008) August 23, 2024
அதிலும், கேஎல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டோரியில் பதிவிட்டு 10 நிமிடங்களில் அதனை அழுத்திவிட்டதாக கூறி ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. ஆனால், அவர் அப்படியேதும் பதிவிடவில்லை என்பது உறுதியாகிறது. மேலும் அவரின் புதிய ஆடை பிராண்ட் Metaman குறித்த அறிவிப்பைதான் அவர் ஸ்டோரியில் முன்னதாக குறிப்பிட்டிருக்கலாம் என தெரிகிறது.
KL Rahul announcement was may be about his new clothing brand called METAMAN.#KLRahul #CricketTwitter #CricketUpdate #Cricket pic.twitter.com/fIxrhhaemn
(@Balvir02) August 23, 2024
கேஎல் ராகுல் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் கிளாஸான வீரர் என்பதால் அவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட மாட்டார் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ