ENG vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 வருட வரலாற்றில் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2022, 12:27 PM IST
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள்
  • முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற அங்கீகாரம்
ENG vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் title=

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன், டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் இதுவரை எந்த வேகப்பந்துவீச்சாளரும் செய்யாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை  

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக 1877 ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அப்போது முதல் சுமார் 145 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி வரலாற்றில், வேகபந்துவீச்சாளர் ஒருவர் இதுவரை நிகழ்த்தாத சாதனை ஒன்றை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் 650 விக்கெட்டுகளை யாரும் எடுத்ததில்லை. அந்த சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார். 

மேலும் படிக்க | IND vs SA: வாழ்வா? சாவா? போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுகம்

39 வயதான  ஜேம்ஸ் ஆண்டர்சன் முதன்முறையாக 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 19 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி,  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறார் அவர். மேலும், டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரன், பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 709 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷேன் வார்னே, இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3வது இடத்திலும் இருக்கின்றனர். இந்தியாவின் அனில் கும்பிளே 619 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். 

மேலும் படிக்க | ஷாருக்கானை தொடர்ந்து ஐபிஎல்லில் தடம்பதிக்க விரும்பும் சல்மான்கான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News