ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து சென்றுள்ளது. அங்கு அந்த அணிக்கு எதிராக 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்பின்னர் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கும் முன்பாக திடீரென மழை பெய்தது. இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் போட்டியானது 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மேலும் படிக்க | டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இயக்குனர் கவுதம் மேனனின் மகன்!
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஓபனிங் இறங்கிய ஸ்டெர்லிங் மற்றும் பால்பிரைனி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அயர்லாந்து அணி குறைவான ரன்களை மட்டுமே எடுக்கும் என எண்ணியிருந்த நிலையில் களம் புகுந்தார் விக்கெட் கீப்பர் ஹாரி டெக்டர். அவர் களமிறங்கியதும் ஆட்டம் சூடு பிடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சுகளை நாலாபுறமும் சிதறடிக்கத் தொடங்கினார். 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் குவித்தார்.
இதில் மூன்று சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். அவரது ஆட்டத்தால் இந்திய அணிக்கு அயர்லாந்து அணி சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது. இருப்பினும், இந்திய அணி இந்த வெற்றி இலக்கை 10 ஓவர்களில் எட்டியது. தீபக் ஹூடா உள்ளிட்டோர் அசத்தலாக விளையாடினர். சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, அயர்லாந்து அணியை வெகுவாக பாராட்டினார்.குறிப்பாக பேட்டிங்கில் இந்திய அணியை அச்சுறுத்திய ஹாரி டெக்டரை புகழ்ந்த அவர், பேட் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்ததாக கூறினார். அவருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறிய பாண்டியா, அதற்கு தன்னுடைய வாழ்த்துகளை கூறிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR