ஐபிஎல் தொடரில் தன்னிகரில்லாத கேப்டனாக இருப்பவர் தோனி. நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை பெற்று கொடுத்தது மட்டுமல்லாமல் அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற ஐபிஎல் அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற பெருமையும் தோனி வசமே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஆண்டுடன் தோனி ஐபிஎல் போட்டிக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பது மட்டுமே இப்போது வரை சஸ்பென்ஸாக இருக்கிறது. இந்நிலையில், தோனி ஏன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக சரியான நேரம்? என்பதற்கான 3 காரணங்களையும் பார்த்துவிடலாம்.
சேப்பாக்கத்தில் தோனி
ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு குறித்து தோனியிடம் கேட்கப்பட்டபோது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய பிறகே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடை பெறுவேன் என கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு கடைசியாக விளையாடும் போட்டியின்போது தன்னுடைய ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IPL Ticket Booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?
சிறந்த ஆட்டம் இல்லை
தோனி கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஒரு கேப்டன் மட்டும் விக்கெட் கீப்பராக மட்டுமே அணிக்கு பங்களித்து வருகிறார். பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியிருக்கும் 44 போட்டிகளில் தோனி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியிருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டம் அவரிடம் இருந்து வரவில்லை.
ஐபிஎல் தொகை
தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து வருகிறது. ஆனால், அதற்குரிய ஆட்டம் அவரிடம் இருக்கிறதா? என்றால் இல்லை. தன்னுடைய தொகைக்கு உரிய ஆட்டம் விளையாடாத பல வீரர்கள் அடுத்தடுத்த சில போட்டிகளில் இருந்து காணாமல் போய் உள்ளனர். பெரிய கேப்டன் என்ற பெயர் எடுத்தவர்கள் கூட விளையாடாதபோது விமர்சிக்கப்பட்டனர். ஆனால் தோனிக்கும் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் விளையாடவில்லை என்றாலும் அணியில் இருந்தால்போதும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு இந்த எதிர்பார்ப்பு அப்படியே இருக்கும் என்று சொல்லமுடியாது என்பதால், கவுரவமாக இருக்கும்போதே ஓய்வு பெற்றுவிடுவது நல்லது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023க்கு பிறகு தோனியின் பிளான் இதுதான்! போட்டுடைத்த சிஎஸ்கே வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ