IPL 2023: சிஎஸ்கே வீரர்களிடம் கோலி குறித்து பேசிய தோனி! வைரலாகும் வீடியோ!

IPL 2023: தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே முகாமில் தோனி சக வீரர்களிடம் விராட் கோலி குறித்து பேசிய வீடியோ வைரல் ஆகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 8, 2023, 12:48 PM IST
  • புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் சென்னை அணி.
  • மும்பையை சென்னையில் வீழ்த்தியது.
  • அடுத்து டெல்லி அணியுடன் மோத உள்ளது.
IPL 2023: சிஎஸ்கே வீரர்களிடம் கோலி குறித்து பேசிய தோனி! வைரலாகும் வீடியோ! title=

IPL 2023: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஐகான் விராட் கோலியும், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வருகின்றனர். CSK ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற பிறகு ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன், சிஎஸ்கே கேப்டன் தோனி சமீபத்தில் சூப்பர் கிங்ஸ் டிரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களுடன் பேசும் போது, கோலி பற்றி பெருமையாக பேசி உள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்

ஐபிஎல் 2023ன் இரண்டாவது கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அதில் சிஎஸ்கே அணி மும்பை அணியை சென்னையில் வீழ்த்தியது.  இதனை தொடர்ந்து ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் தனது அணி வீரர்களுக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி கோலி பற்றி பெருமையாக பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.  “விராட் முதல் பந்தை இப்படி ஆடுவதில்லை. இது எப்பொழுதும் இங்கே இருக்கும்" என்று கோலியின் பேட்டிங் ஸ்டைல் ​​குறித்து தோனி பேசுவதைக் கேட்கலாம். இந்த அரிய வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது வைரலான வீடியோ குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவும் குறிப்பிடத்தக்க கருத்தை தெரிவித்துள்ளார். 

 

சிதம்பரம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2023 ஆட்டத்தில் தோனியின் சிஎஸ்கே அணி, ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் மற்றும் 15 ரன்களை விட்டுக்கொடுத்து சிறப்பாக பந்து வீசிய மதீஷ பத்திரன ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஐபிஎல் கிளாசிகோவில் எம்ஐக்கு எதிராக சிஎஸ்கே வென்றது பற்றி பேசுகையில், தோனி தனது சக வீரர் பத்திரனாவை பாராட்டினார். சிஎஸ்கே கேப்டன் பத்திரனாவை சிவப்பு-பந்து கிரிக்கெட்டுவிளையாடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தினார். "நான் தனிப்பட்ட முறையில் அவர் சிவப்பு-பந்து கிரிக்கெட்டை விளையாட வேண்டியவர் அல்ல என்று நான் நினைக்கிறேன்," என்று தோனி கூறினார். தோனியின் தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு CSK ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், சிமர்ஜேதானா, மதீஷா பத்திரன், மதீஷா பத்திரன், , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா, சிசண்டா மகலா

மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News