DCvsKKR: சொன்னதை செய்து காட்டிய கங்குலி - டெல்லியின் முதல் வெற்றிக்கு பின் நெகிழ்ச்சி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் , கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய கங்குலி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2023, 08:59 AM IST
DCvsKKR: சொன்னதை செய்து காட்டிய கங்குலி - டெல்லியின் முதல் வெற்றிக்கு பின் நெகிழ்ச்சி title=

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று, இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டிக்குப் பிறகு பேசிய சவுரவ் கங்குலி, 25 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் முதல் ரன் எடுப்பதற்கு முன் எனக்குள் இருந்த பதட்டத்தை இந்த வெற்றியின்போது உணர்ந்தேன் என நெகிழ்ச்சியாக கூறினார். 

டெல்லி  - கொல்கத்தா மோதல்

டேவிட் வார்னர் தலைமையில் களம் கண்டிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சோதனையுடன் தொடங்கியிருக்கிறது. ஒரு வெற்றி பெறுவதற்கு அந்த அணி 6 போட்டிகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் தொடர்ச்சியாக 5 தோல்விகளை பெற்று, மிகவும் பரிதாபமான சூழலில் இருந்தது. டேவிட் வார்னரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அந்த அணியில் பேட்டிங் இன்னும் விளையாடவில்லை. 

மேலும் படிக்க | IPL 2023: விராட் கோலிக்கு வெற்றியை பரிசளித்த சிராஜ்... பரிதாபமாக தோற்றது பஞ்சாப்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அவரே அரைசதம் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டார். அதனால், கொல்கத்தா அணி நிர்ணயித்த 127 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 19.2வது ஓவரில் எட்டிப் பிடித்தது. இதுவரை 6 போட்டிக்களில் விளையாடி இருக்கும் டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

சவுரவ் கங்குலி ரியாக்ஷன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய சவுரவ் கங்குலி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது முதல் ரன் எடுப்பதற்கு எவ்வளவு அழுத்தத்தை உணர்ந்தேனோ அந்த அழுத்தத்தை இந்த வெற்றி பெறுவதற்காக உணர்ந்தேன் என தெரிவித்தார். இன்றறைய நாள் எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. பந்துவீச்சில் சிறப்பாக இருக்கிறோம். ஆனால் பேட்டிங்கில் இன்னும் பிரச்சனை இருக்கிறது. ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள். நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். அணியில் இருக்கும் இளம் வீரர்கள் பேட்டிங் செய்ய, அதற்கேற்ற வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யும் என்று கூறினார். 

இஷாந்த் ஷர்மா அறிமுகம்

டெல்லி அணிக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான இஷாந்த் ஷர்மா அறிமுகமானார். 34 வயதான ஷர்மா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கொல்கத்தா அணி பவர் பிளேவில் தடுமாறுவதற்கு இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | IPL 2023: உருண்டு புரண்டு முதல் வெற்றியை பெற்ற டெல்லி... கொல்கத்தாவின் போராட்டம் வீண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News