ஜியோ சினிமா பார்க்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? முழு விவரம்!

ஜியோ சினிமா பிரீமியத்தில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய சமீபத்திய ஹெச்பிஓ நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் சக்ஸஷன் ஆகியவை அடங்கும்.    

Written by - RK Spark | Last Updated : May 17, 2023, 08:57 PM IST
  • ஜியோசினிமா செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • ஜியோசினிமா செயலியை ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இயக்க முடியும்.
  • ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.999 ஆகும்.
ஜியோ சினிமா பார்க்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? முழு விவரம்! title=

இதுவரை பயனர்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து வந்த பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா தற்போது அதன் பிரீமியம் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது தற்போது அதன் பயனர்களுக்கு அதிகளவிலான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.  ஃபிஃபா உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2023 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் மற்றும் விக்ரம் வேதா போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து அதிகப்படியான வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்த நிலையில் தற்போது இந்த தளம் சந்தா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.  ஜியோசினிமா பிரீமியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயனர்கள் இப்போது ஹெச்பிஓ போன்ற முன்னணி ஸ்டுடியோக்களில் இருந்து இன்னும் பிரத்தியேகமான நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும்.  ஜியோசினிமா பிரீமியத்தில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய சமீபத்திய ஹெச்பிஓ நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் சக்ஸஷன் ஆகியவை அடங்கும்.  இதுதவிர இனிவரும் மாதங்களில் ஜியோ சினிமா அதன் பிரீமியம் லைப்ரரியில் மேலும் அற்புதமான நிகழ்ச்சிகளை சேர்ப்பதாக உறுதியளித்துள்ளது.  நீங்கள் ஜியோசினிமா செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | IPL 2023 Points Table: பிளேஆஃப்பிற்கு சென்ற குஜராத்! சென்னைக்கு வாய்ப்பு இல்லையா?

ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வாங்க, ஜியோசினிமா இணையதளத்திற்குச் சென்று, சப்ஸ்க்ரைப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும், இந்த சந்தா திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.999 ஆகும்.  சந்தா செலுத்துவதன் மூலம் நீங்கள் எந்த சாதனத்திலும் இருந்து ஜியோசினிமா செயலியை இயக்கிக்கொள்ளலாம். இதில் நீங்கள் உயர் ரக வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை அனுபவிக்கலாம், இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இந்த செயலியை இயக்க முடியும்.  அதாவது உங்கள் கணக்கை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.  தற்போது பயனர்களுக்கு ஒரு வருட சந்தா திட்டத்தை மட்டுமே ஜியோசினிமா வழங்குகிறது, இனிவரும் காலங்களில் ஜியோசினிமா மலிவான விலையில் சில மாதாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜியோசினிமா இந்த ஆண்டின் தொடக்கத்தில் WarnerBros உடன் கூட்டு சேர்ந்துள்ளது.  மற்ற இயங்குதளங்களை போன்று ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த கட்டண முறையின் மூலம் சந்தையில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.  நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி தளங்கள் இனிமேல் ஜியோசினிமாவோடு போட்டிபோடும். இந்த புதிய கூட்டாண்மை மூலம், ஜியோசினிமா அதிக பயனர்களை ஈர்க்கும் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக அதன் நிலையை உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹெச்பிஓ நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்து உயர்ந்தது போன்று ஜியோசினிமாவும் வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.

ஜியோசினிமாவில் ஒளிபரப்பாகும் ஹெச்பிஓ நிகழ்ச்சிகளின் பட்டியல்:
 
1) The Last of Us

2) House of the Dragon

3) Chernobyl

4) White House Plumbers

5) White Lotus

6) Mare of Easttown

7) Winning Time

8) Barry

9) Succession

10) Big Little Lies

11) Westworld

12) Silicon Valley

13) True Detective

14) Newsroom

15) Game of Thrones

16) Entourage

17) Curb Your Enthusiasm

18) Perry Mason

மேலும் படிக்க | LSG vs MI: பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யப்போவது யார்? மும்பை - லக்னோ போட்டியில் இருக்கும் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News