IPL 2023: அடேங்கப்பா! 14 வருட சாதனை... ஒரே போட்டியில் முறிடியத்த ராஸ்தான் - என்ன தெரியுமா?

IPL 2023 SRH vs RR: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 14 வருடங்களாக இருந்த சாதனை ஒன்றை ராஜஸ்தான் தற்போது முறியடித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 2, 2023, 08:36 PM IST
  • 2009இல் டெக்கான் சார்ஜஸ் அந்த சாதனையை படைத்திருந்தது.
  • ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  • ஆட்டநாயகன் ஜாஸ் பட்லர்.
IPL 2023: அடேங்கப்பா! 14 வருட சாதனை... ஒரே போட்டியில் முறிடியத்த ராஸ்தான் - என்ன தெரியுமா? title=

IPL 2023 SRH vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மாலை மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீசிய நிலையில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 203 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 54 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களை எடுத்தனர். 

இதனையடுத்து, பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, தொடக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும், யாரும் சரியான பார்ட்னர்ஷிப்பை அமைக்காததால், அந்த அணி 20 ஓவர்களுக்கு 131 ரன்களை குவித்தது. ஆறுதலாக கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்களை அப்துல் சமத் - உம்ரான் மாலிக் ஜோடி குவித்தது. மேலும், அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம், ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 22 பந்துகளில் 54 ரன்களை குவித்த பட்லர் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகம்... மேகக்கூட்டங்களுடன் வருகிறாரா வருணபகவான்?

இந்த வெற்றி ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகள் பழமையான ஒரு சாதனை இன்று முறியடித்துள்ளது. குறிப்பாக, பட்லர் - ஜெய்ஸ்வால் ஜோடிதான் அந்த சாதனைக்கு வழிவகுத்தது. அதாவது, ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை குவித்த பட்டியல்களில் ஆறாவது இடத்தை பிடித்து, டெக்கான் சார்ஜஸ் (ஹைதராபாத்) அணியை பின்னுக்கு தள்ளியது. 

2009ஆம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில், அப்போதைய ஹைதராபாத் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 25 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை விளாசி 74 ரன்களை குவித்தார். அதன்மூலம், அந்த அணி பவர்பிளேயில் 84 ரன்களை குவித்தது. தற்போது அந்த சாதனையைதான் ராஜஸ்தான் முறியடித்துள்ளது. இதுதான் ராஜஸ்தான் அணி பவர்பிளேயில் குவித்த அதிகபட்ச ரன்களாகும். 

இந்த பட்டியலில், கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டு, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் பவர்பிளேயில், கொல்கத்தா விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளது. 

ஐபிஎல்லில் முதல் 6 ஓவர்களுக்குப் பிறகு அதிகபட்ச அணி ஸ்கோர்:

105/0 - KKR vs RCB, பெங்களூர், 2017
100/2 - CSK vs PBKS, மும்பை, 2014
90/0 - CSK vs MI, மும்பை, 2015
87/2 - KTK vs RR, இந்தூர், 2011
86/1 - PBKS vs SRH, ஹைதராபாத், 2014
85/1 – RR vs SRH, ஹைதராபாத், 2023

ஐபிஎல்லில் ராயல்ஸ் அணிக்கு அதிக பவர்பிளே ஸ்கோர்:

85/1 vs SRH, ஹைதராபாத் 2023
81/1 vs CSK, அபுதாபி 2020
73/1 vs டெக்கான், ஹைதராபாத் 2008
70/0 vs PBKS, ஜெய்ப்பூர் 2010

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி அணிக்கு வராத ஆல்ரவுண்டர்..! எப்போது வருவார் என எதிர்பார்க்கும் நிர்வாகம்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News