IPL 2023: ஐபிஎல் மட்டுமல்ல WTC பைனலுக்கும் டாட்டா... கேஎல் ராகுல் உருக்கம்!

IPL 2023 KL Rahul: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள கே.எல். ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 06:24 PM IST
  • அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிப்பு.
  • கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
  • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
IPL 2023: ஐபிஎல் மட்டுமல்ல WTC பைனலுக்கும் டாட்டா... கேஎல் ராகுல் உருக்கம்! title=

KL Rahul Ruled Out Of IPL: நடப்பு ஐபிஎல் தொடர் சற்று பின்னோக்கி பார்த்தோமானால் வீரர்களின் காயம் என்பது தொடர்கதையாக இருந்ததை காணலாம். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே, பல வீரர்கள் காயத்தால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து, தொடரின் முதல் போட்டியிலேயே குஜராத் அணி வீரரும், நியூசிலாந்து வீரருமான கேன் வில்லியம்சன் களத்தில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்தே விலகினார். 

இதையடுத்து, சிஎஸ்கே அணயிலும் காயம் பல வீரர்களை துரத்திக்கொண்டேதான் இருந்தது. தொடர் தொடங்குவதற்கு முன் காயத்தால் விலகிய கைல் ஜேமிசனுக்கு, மாற்று வீரராக வாங்கப்பட்ட சிசாண்டா மகாலாவும் காயத்தால் தற்போது ஓய்வில் உள்ளார். சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார் ஆகியோரும் காயத்தால் பாதிக்கப்பட்டனர். 

கேப்டன்களை துரத்தும் காயம்

காயம் கேப்டன்களையும் விட்டுவைக்கவில்லை. தோனி, தவாண், டூ பிளேசிஸ் என பலரும் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். அந்த வரிசையில், சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கின்போது ல்கனோ அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், அந்த போட்டியின்போதே அவர் பீல்டிங்கில் களமிறங்கவில்லை. பேட்டிங்கிலும் கடைசி வீரராக களமிறங்கி நடக்கக்கூட இயலாமல் மிகவும் சிரமப்பட்டார். 

மேலும் படிக்க | CSK vs MI: மும்பை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்! ஏன் தெரியுமா?

தொடர்ந்து, அவர் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய நிலையில், தற்போது நடப்பு ஐபிஎல் தொடரிலும் இருந்தும், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 

உருக்கமான பதிவு

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.எல். ராகுல் அவரது சமூக வலைதள பக்கங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,"மருத்துவக் குழுவுடன் கவனமாக பரிசீலித்து, ஆலோசனை செய்த பிறகு, விரைவில் என் தொடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் எனது சிகிச்சை மற்றும் ஓய்வில் எனது கவனம் இருக்கும். இது ஒரு கடினமான முடிவு. ஆனால் முழுமையான உடற்தகுதிக்கு இது சரியானது என்று எனக்குத் தெரியும். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KL Rahu (@klrahul)

அணியின் கேப்டனாக, இந்த முக்கியமான காலகட்டத்தில் இருக்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால், இளம் வீரர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உயர்ந்து, எப்போதும் போல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்த்து, உங்கள் அனைவரோடும் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவேன்.

WTC இறுதிப்போட்டிக்கும் வாய்ப்பில்லை

இந்தியா அணியுடன் அடுத்த மாதம் ஓவல் மைதானத்தில் நான் இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாகிறது. என் நாட்டிற்கு திரும்பவும் உதவவும், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அது எப்போதும் எனது கவனமும் முன்னுரிமையும் ஆகும்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் - எனது ரசிகர்கள், எனக்கு மீண்டும் எழுவதற்கு வலிமை அளித்தது, லக்னோ அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ அவர்களின் உடனடி நடவடிக்கைக்காகவும், எனது அணியினர் இந்த கடினமான நேரத்தில் தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காகவும். உங்களின் ஊக்கமும் செய்திகளும் எனக்கு மிகவும் முக்கியம் மேலும் முன்பை விட வலுவாகவும் ஃபிட்டராகவும் திரும்பி வர என்னை ஊக்குவிக்கின்றன.

மீண்டு வருவேன்

இதற்கிடையில், எனது முன்னேற்றம் குறித்து உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வேன் என்பதை உறுதியளிக்கிறேன். மேலும் விரைவில் களத்திற்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நான் மீண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். காயங்கள் எப்பொழுதும் எளிதல்ல, ஆனால் நான் எப்பொழுதும் எல்லாவற்றையும் கொடுப்பேன். அனைத்து ஆதரவுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி" என குறிப்பிட்டிருந்தார். 

லக்னோ அணி தற்போது 11 புள்ளிகளுடன், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. தற்போது கே.எல். ராகுலுக்கு பதிலாக குர்னால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவரில் கட்டுப்படுத்திய வருண் சக்ரவர்த்தி... ஹைதராபாத்திற்கு மோசமான தோல்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News