’RCB கப் அடிச்சா தான் ஸ்கூலுக்கு போவேன்’ கட்அவுட்டுடன் மேட்ச் பார்க்க வந்த குழந்தை

ஆர்சிபி கப் அடிக்கும் வரை நான் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்ற போஸ்டருடன் ஆர்சிபி - கேகேஆர் மேட்ச் பார்க்க வந்த குழந்தையின் புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2023, 08:29 AM IST
  • ஆர்சிபி அணிக்கு வந்த புது சோதனை
  • கப் அடிக்காம ஸ்கூல் போக மாட்டேன்
  • சின்ன குழந்தையின் போஸ்டர் வைரல்
’RCB கப் அடிச்சா தான் ஸ்கூலுக்கு போவேன்’ கட்அவுட்டுடன் மேட்ச் பார்க்க வந்த குழந்தை title=

ஆர்பிசி அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்குமான ராசி ஏட்டிக்குபோட்டியாகவே இருக்கு. இந்த ஆண்டாவது கோப்பையை வெல்லும் என்ற கனவோடு இருக்கும் அந்த அணி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஆர்சிபி அணி சந்திக்கும் தோல்விகளால் மீண்டும் நம்பிக்கையை இழக்க தொடங்கியிருக்கின்றனர். வலுவான பேட்டிங், பவுலிங் லைன்அப் வச்சிருந்தும் ஏன் இப்படி அசால்டாக ஆடி தோற்கிறார்கள்? என்ற ஒவ்வொரு போட்டிக்குப் பிறகு கடுமையாக வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள். சிஎஸ்கே மும்பை ரசிகர்களின் கேலியை எத்தனை நாள் தான் சமாளிக்கிறது என்று தலையிலும் அடித்துக் கொள்கின்றனர். இவ்வளவு மற்ற அணி ரசிகர்கள் கேலி கிண்டலுக்கு பதில் கொடுத்துக் கொண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், இப்போது பொறுமையை இழக்க தொடங்கிவிட்டனர்.

எத்தனை நாள் தான் கப் அடிப்பார்கள் என்று இழவு காத்த கிளியாக இருப்பது, 15 ஆண்டுகள் அந்த அணிக்கு எந்தெந்த சமயத்தில் எல்லாமோ சப்போர்ட் செய்துவிட்டோம்... இனி நம்மால முடியாது டா சாமின்னு அவர்களே ஆர்சிபி அணியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். மற்றவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகி தீராத காயங்களையும், வடுக்களையும் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கும் ஆர்சிபி ரசிகர்கள், மைதானத்துக்கு வரும்போதே தங்களின் எதிர்பார்ப்புகளை இப்போது போஸ்டர்களாக அடித்துக் கொண்டு வரத் தொடங்கிவிட்டனர். 

அப்படியொரு போஸ்டருடன் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி மேட்ச் நடந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வந்த குழந்தை ரசிகையின் புகைப்படம் தான் இப்போது வைரலாகியிருக்கிறது. அந்த குழந்தை ரசிகையின் கையில் இருக்கும் போஸ்டரில், ஆர்சிபி அணி கப் அடிக்கும் வரை நான் பள்ளிக்கூடம் சேர மாட்டேன் என எழுதியிருக்கிறது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | RCB vs KKR: பெங்களூருவை மீண்டும் வீழ்த்திய கேகேஆர்... கோலியின் அரைசதமும் வீண்!

ஆர்சிபி கப் அடிக்கிற வரை நீங்கள் பள்ளி செல்லமாட்டேன் என்ற உறுதியுடன் இருந்தால் காலத்துக்கும் நீங்கள் பள்ளிக்கூடம் பக்கமே போக முடியாது என ஒரு நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார். இன்னொருவர், பள்ளிக்கூடம் போகாததற்கு குழந்தை போட்டிருக்கும் செம பிளான் இது...இதற்கு பள்ளிக்கூடம் போகமாட்டேனு அவங்க அப்பா அம்மா கிட்டயே சொல்லியிருக்கலாம்.. ஆனால் ஸ்மார்ட்ஆ யோசிச்சு இப்படி பண்ணிருக்கு என ஜாலியாக எழுதியுள்ளார். 

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியிலும் ஆர்சிபி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் இறங்கிய கேகேஆர் 200 ரன்கள் விளாச, பின்னர் விளையாடிய ஆர்சிபி அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மேலும் படிக்க | IPL 2023: இப்படி விளையாடுவாங்கனு கொஞ்சமும் எதிர்பார்க்கல... ஆர்சிபி வீரர்களை திட்டி தீர்த்த விராட் கோலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News