CSK vs LSG: முதல் போட்டி தோல்வி! சென்னை அணியில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்!

CSK Vs LSG Dream11 Team Prediction: ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்த சென்னை, தனது அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை இன்று எதிர்கொள்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2023, 12:24 PM IST
  • இன்று நடைபெறும் சென்னை vs லுக்னோ போட்டி.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
CSK vs LSG: முதல் போட்டி தோல்வி! சென்னை அணியில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்! title=

CSK Vs LSG Dream11 Team Prediction: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023-ஐ ஏமாற்றமளிக்கும் வகையில் தொடங்கிய எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இன்று திங்கள்கிழமை சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராகவிளையாடுகிறது. தனது முதல் போட்டியில் 178/7 என்ற நல்ல ஸ்கோர் அடித்தாலும், குஜராத் அணி CSK-ஐ ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மோசமான பவுலிங் தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். டுவைன் பிரிட்டோரியஸ் போன்ற பவுலரை அணியில் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி அணிக்கு வராத ஆல்ரவுண்டர்..! எப்போது வருவார் என எதிர்பார்க்கும் நிர்வாகம்?

இதற்கிடையில், லக்னோ இந்த சீசனில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வெற்றி பெற்றது.  KL ராகுல் தலைமையிலான லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் 2023-ஐ வெற்றியுடன் தொடங்கி உள்ளது.  முதல் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஓப்பனிங் பாட்னர்சிப் நன்றாக இருந்தாலும், மிடில் ஆர்டரில் ரன்கள் அடிக்க தவறியது.  இதனால் அந்த இடத்தை வலுவாக்க சென்னை அணி முயற்சி செய்யும்.  

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.  இதனால் இந்த போட்டியின் மீது சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.  கடந்த போட்டியில் ரன்கள் அடிக்க தவறிய பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.  இரவு 7.30 மணிக்கு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியை ஜியோசினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழலாம்.

சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, சிங் தீக்ஷனா, பிரசாந்த் சிம்ஹர்ஷனா, பிரசாந்த் சலங்கிஷானா சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, பென் ஸ்டோக்ஸ், சிசண்டா மகலா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: கேஎல் ராகுல், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், யுத்வீர் சரக், நவீன் உல் ஹக், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா, டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், நிக்கோலஸ் பூரன்

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகம்... மேகக்கூட்டங்களுடன் வருகிறாரா வருணபகவான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News