ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2024, 09:33 AM IST
  • அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா?
  • நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
  • மெகா ஏலம் தொடர்பாக பேச உள்ளார்.
ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்! title=

IPL Mega Auction: 2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் முடிந்தவுடன் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்படும்.

மேலும் படிக்க | பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!

 

2023ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ரசிகர்களுக்காக அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். 2004ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ, அதே கெட்டப்பில் ஐபிஎல் 2024ல் விளையாடினார். நீளமான தலைமுடியுடன், தனது பேட்டில் பழைய ஸ்டிக்கர் ஒட்டி சீசன் முழுவதும் வளம் வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பிளே ஆப்களுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. கடந்த ஆண்டு முதலே தோனிக்கு முழங்காலில் பிரச்சனை இருந்தது. எனவே கடைசி ஓவரில் மட்டுமே பேட்டிங் செய்ய வந்தார். காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டும் முழுமையாக சரியாகவில்லை. 

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி?

ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவது அவரது உடற்தகுதி பொறுத்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெகா ஏலம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே வரும் ஜூலை 31-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட உள்ளது. அணி உரிமையாளர்கள் 7 முதல் 8 பேரை தக்கவைத்து கொள்ள விரும்புகின்றனர். 2022ம் ஆண்டு நடைபெற மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது. இந்த முறையும் அதே நடைமுறை தொடர்ந்தால் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து சென்னை அணியின் உரிமையாளர் என் சீனிவாசனுடன் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி, 5 பேருக்கு மேல் தக்கவைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தால் தோனி 2025ல் விளையாடுவது நிச்சயம் என்றும், அதற்கு கம்மியாக இருந்தால் ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறினால், நான்கு பேரில் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைக்க முடியும். அதில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை தக்கவைத்தால் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கும். ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடவில்லை என்றால், நிச்சயம் அணியின் வழிகாட்டியாக இருப்பார். 2008ல் இருந்து விளையாடும் ஒரே வீரர் தோனி மட்டுமே.

மேலும் படிக்க | லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News