IPL 2024: ரஹானே காயம்! சென்னை அணியில் இணையும் சேட்டேஷ்வர் புஜாரா?

Cheteshwar Pujara: புஜாரா அவரது X தளத்தில் மீண்டும் #SupperKings-ல் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2024, 10:17 AM IST
  • குழப்பத்தை ஏற்படுத்திய புஜாராவின் பதிவு.
  • சென்னை அணியில் இணையப்போகிறாரா என்று குழப்பம்.
  • ரசிகர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் இருந்தனர்.
IPL 2024: ரஹானே காயம்! சென்னை அணியில் இணையும் சேட்டேஷ்வர் புஜாரா? title=

IPL 2024: ஐபிஎல் 2024 சீஸனின் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த போட்டியில் சென்னை அணி சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய அணியின் மூத்த பேட்டர் சேட்டேஷ்வர் புஜாரா X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  புஜாரா தனது X தளத்தில், "#SupperKings இந்த சீசனில் உங்களுடன் சேர ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!" என்று பதிவிட்டு இருந்தார். 

மேலும் படிக்க | Thala For A Reason: ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சிறந்த 7 மைல்கல்!

இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்துவிட்டாரா என்று குழப்பத்தில் இருந்தனர். காரணம் கடந்த போட்டியில் ரஹானே காயம் காரணமாக பீல்டிங் மற்றும் பேட்டிங் செய்யவில்லை. மேலும் மும்பை அணி எதிரான போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்கினார்.  ஒருவேளை அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ளாரா என்ற ரசிகர்கள் ஆவலுடன் இதனை பார்த்து கொண்டு இருந்தனர். புஜாரா 2021 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். ஐபிஎல்லில் இதுவரை நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ள புஜாரா தனது இடத்தை தக்கவைத்து கொள்ள கடுமையாக போராடினார்.  இருப்பினும் 30 ஐபிஎல் போட்டிகளில் 20.53 சராசரி மற்றும் 99.74 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 390 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

2021ல் புஜாரா சென்னை அணியில் எடுக்கப்பட்டபோது பலரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.  புஜாராவின் அனுபவமும் திடமான பேட்டிங் சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் உதவும் என்று எதிர்பார்த்தனர். புஜாரா 2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸால் அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டார், ஆனால் அந்த சீசன் முழுவதும் ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை.  இருப்பினும், ரசிகர்கள் புஜாராவின் ட்வீட்டில் உள்ள ரகசியத்தை பின்னர் புரிந்து கொண்டனர். தனது X பதிவில் அவர் "சூப்பர் கிங்ஸ்" என்று குறிப்பிடவில்லை, "#SupperKings" என்று குறிப்பிட்டுள்ளதை உணர்ந்தனர். இந்த சிறிய மாறுபாறு சிறிது நேரம் சென்னை ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.  

செட்டேஷ்வர் புஜாரா சசெக்ஸுடன் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் இந்த ஆண்டு விளையாட உள்ளார். அதற்காக தான் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.  வரும் வெள்ளிக்கிழமை லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான விளையாட உள்ளார்.  புஜாரா 2022 சீசனில் சசெக்ஸில் சேர்ந்தார், மேலும் இந்த சீசனில் முதல் பிரிவுக்கு திரும்பிய கவுண்டி அணிக்காக 18 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசனில் முதல் ஏழு போட்டிகளில் அவர் விளையாடுவார். புஜாரா ரஞ்சி டிராபி 2023-24 சீசனில் சவுராஷ்டிராவுக்காக 69.08 சராசரியுடன் 13 இன்னிங்ஸில் 829 ரன்கள் அடித்துள்ளார்.

மேலும் படிக்க | MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News