இந்தியாவில் நடைபெறும் அடுத்த ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அப்டேட் வெளியாக தொடங்கியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த முறை இந்தியாவில் நடக்காது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயில் மிகப் பிரம்மாண்டமாக ஏலம் நடைபெற இருக்கிறது. அதிகபட்சமாக டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி ஐபிஎல் 2024-க்கான ஏலம் நடைபெறும். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு தேர்வானார். இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையை படைத்தார்.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் தோல்வி இவரால் வரலாம்...! என்ன செய்யப்போகிறார் ரோஹித் சர்மா?
ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடந்தாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் அதற்கு பிசிசிஐ வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்தன. இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் பேசும்போது, ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்திருக்கிறார். வழக்கம்போல் இந்தியாவில் ஐபிஎல் 2024 கோலாகலமாக நடைபெறும் என கூறியிருக்கிறார்.
Major IPL 2024 updates. [Cricbuzz]
இதற்கான அனைத்து அணிகளும் தங்களின் ஆயத்த பணிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஐபிஎல் அணிகள் புதியவர்களை நியமித்துக் கொண்டிருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் விளையாடிய லசித் மலிங்கா இப்போது மீண்டும் அந்த அணியுடன் இணைந்துள்ளார். அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பயிற்சியாளர் குழுவில் இருந்தார். நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் பாண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். அவர் இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
பயிற்சியாளர்களைக் கடந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இளம் வீரர்களையும் ஐபிஎல் அணிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களில் இம்முறை யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதனால் 2024 ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு சுவாரஸ்யங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம் என்ற நிலையில் தான் இப்போது ஐபிஎல் ஏலம் நடைபெறும் தேதி குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ