Chennai Super Kings: ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது சென்னை அணி. மேலும் இந்த ஆண்டும் 6வது முறையாக கோப்பையை வெல்ல தயார் ஆகி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இருப்பினும், தற்போது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2023ல் சென்னை அணி கோப்பையை வெல்ல அணிக்கு பக்க பலமாக இருந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன்? தோனியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீரர்!
ஷிவம் துபேவிற்கு காயம் பெரியதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனவே தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி 2024 சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். ரஞ்சியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் ஷிவம் துபே. அஸ்ஸாம் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது, அந்த போட்டியில் சதம் அடித்து இருந்தார் துபே. U-19 உலகக் கோப்பை 2024ல் இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் துபேவிற்கு பதிலாக அணியில் இடம் பெற உள்ளார்.
"துபேவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரஞ்சி டிராபி சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவர் வெளியேற வாய்ப்புள்ளது. அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தின் போது பேட்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக முஷீர் கான் நியமிக்கப்படுவார்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த வகையான காயம் குணமடைய 8 வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டிகளை ஷிவம் துபே இழக்க நேரிடும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் முக்கியமான வீரராக சிவம் துபே இருந்தார்.160 ஸ்டிரைக் ரேட்டில் 35 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 418 ரன்கள் அடித்து இருந்தார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார் துபே. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் அரை சதம் அடித்து அசத்தி இருந்தார். மேலும், பவுலிங்கில் சிறப்பாக பந்து வீசி முக்கியமான நேரங்களில் விக்கெட்களை வீழ்த்தினார்.
ஐபிஎல் 2024க்கான சென்னை அணி:
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் மன்ஷேத்ஹானா, மன்ஜய் சின்ஷெத்ஹானா, அஜிங்க்யா ரஹானே. , முகேஷ் சவுத்ரி, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவினாஷ் ராவ் ஆரவெல்லி
மேலும் படிக்க | IND vs ENG: 4வது டெஸ்டில் பும்ரா விலகல்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ