IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா

டேவிட் வார்னர் மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளார். வார்னர் டி20 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2021, 08:53 AM IST
  • விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக RCB இன் கேப்டனாக இருந்து வருகிறார்.
  • கோஹ்லிக்கு பிறகு ஆர்சிபி கேப்டன் யார் என்பது பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.
  • அனைத்து அணிகளின் பார்வையும் அடுத்த சீசனில் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் வார்னரை தங்கள் அணியில் சேர்ப்பதில்தான் உள்ளது.
IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா title=

IPL 2022: ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே வென்றது. ஐபிஎல் போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கும் போதே ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்தது.

இந்த சீசனுக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி (Virat Kohli) தெரிவித்துள்ளார். இதையடுத்து கோஹ்லிக்கு பிறகு ஆர்சிபி கேப்டன் யார் என்பது பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

இவர்தான் RCB-யின் புதிய கேப்டனா?

இந்நிலையில், ஆர்சிபியின் புதிய கேப்டன் குறித்து மற்றொரு பெரிய கணிப்பு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், அடுத்த சீசனில் யார் கேப்டனாகக் கூடும் என கணித்துள்ளார்.

RCB டேவிட் வார்னரை (David Warner) தங்கள் அணியின் புதிய கேப்டனாக்ககூடும் என்று ஹாக் கூறினார். அவர் தனது யூடியூப் சேனலில், 'பெங்களூரு விக்கெட் அவருக்கு ஏற்றதாக இருக்கும், அணிக்கு ஒரு புதிய கேப்டன் தேவை என்பதால் RCB அவரை கேப்டனாக்கினால், அது எனக்கு ஆச்சரியமாக இருக்காது’ என்று கூறினார். இந்த வீரரின் தலைமையின் கீழ் விராட் தொடர்ந்து விளையாடுவார் என்று ஹாக் மேலும் கூறினார்.

வார்னர் சிறப்பான பார்மில் உள்ளார்

டேவிட் வார்னர் மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளார். வார்னர் டி20 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்தார். இதில் பல மேட்ச் வின்னிங் ஆட்டங்களும் இருந்தன. அவரது சிறப்பான ஆட்டத்திற்காக போட்டியின் நாயகன் விருதையும் பெற்றார்.

ALSO READ:இந்த பெரிய பொறுப்பை விவிஎஸ் லட்சுமணிடம் ஒப்படைத்த பிசிசிஐ 

இப்போது அனைத்து அணிகளின் பார்வையும் அடுத்த சீசனில் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் வார்னரை தங்கள் அணியில் சேர்ப்பதில்தான் உள்ளது. அதே நேரத்தில், வார்னரை கேப்டனாக்கவும் சில அணிகள் தயாராக இருக்கக்கூடும்.

கோலிக்கு வெற்றி கிடைக்கவில்லை

விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக RCB இன் கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் அவரால் தனது அணியை ஒரு முறை கூட சாம்பியனாக்க முடியவில்லை. எனவே அவர் இந்த பொறுப்பை விட்டு வெளியேறும் அழுத்தத்தில் தொடர்ந்து இருந்தார்.

கோஹ்லியின் தலைமையின் கீழ் ஆர்.சி.பி அணி 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை எட்டியிருந்தாலும், அங்கும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவர்களை வீழ்த்தியது.

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்

ஐபிஎல் (IPL) தொடரில் ஆர்சிபி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். விராட் கோலி ஆர்சிபி கேப்டனாக இருந்த கடைசி ஐபிஎல் 2021 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் ஆகும். ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல்லில் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று விராட் கோலி விரும்பினார். ஆனால், துரதிஷடவசமாக அது நடக்கவில்லை.

ALSO READ: T20 WC: கோப்பை வென்ற வார்னரின் மனைவி அனுப்பிய வைரல் செய்தி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News