கொரோனா காலத்து IPL ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்து விட்டது. அடுத்த IPL ஏலம் இந்த டிசம்பரில் நடக்கவிருந்தது. ஆனால் தொற்றுநோயின் காரணமாக இது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள நிலையில், பல அணிகள் தங்கள் அணியில் இளம் வீரர்களை அதிகம் சேர்க்க விரும்புவதால், பல மூத்த வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. முக்கியமாக, ‘சின்ன தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவைப் (Suresh Raina) பற்றி பல கேள்விகள் எழும்பி வருகின்றன.
புதிய அணிக்கு செல்கிறாரா சுரேஷ் ரெய்னா?
அடுத்த ஆண்டு IPL போட்டிகளில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் அதில் ரெய்னாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், ரெய்னா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு நல்ல செய்தி பற்றி தெரிய வந்துள்ளது. சுரேஷ் ரெய்னா விரைவில் ஒரு புதிய அணியால் வாங்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, அவர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிகக்ப்படலாம்.
9-ஆவது அணியை உருவாக்குகிறதா BCCI?
2020 ஆண்டு IPL (IPL 2020) போட்டிகள் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நல்ல முறையில் நடந்து முடிந்தன. இருப்பினும், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது மற்றும் சீன ஸ்பான்சரின் விலக்கம் ஆகியவை BCCI-க்கு பண வரவை வெகுவாக குறைத்தது. இதை ஓரளவிற்கு சரி செய்ய, BCCI ஒரு புதிய அணியை கொண்டுவரும் திட்டத்தில் உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் ரெய்னா கேப்டனாகக் கூடும்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு IPL-லிருந்து நீக்கப்பட்டிருந்தபோது குஜராத் லயன்ஸ் அணி IPL-ல் பங்கு வகித்தது. அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, அந்த அணியை, மீண்டும் IPL-ல் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னாவே மீண்டும் கேப்டனாக அழைகப்படலாம் என கூறப்படுகிறது.
IPL-ன் மிக நம்பகமான, திறமை நிறைந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவரது அனுபவத்தை அவரை கேப்டனாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என புதிய அணி நினைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
CSK-வும் சுரேஷ் ரெய்னாவும்
IPL தொடக்கத்திலிருந்து CSK-வின் ஒரு உறுதியான மற்றும் நம்பகமான வீரராக இருந்த சுரெஷ் ரெய்னா, மிகுந்த உற்சாகத்துடன் IPL 2020-யில் பங்குகொள்ள UAE-க்கு சென்றார். ஆனால், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களால் அவர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதே வேளையில் அணியுடனும் அவருக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தான் மீண்டும் அணியுடன் சேரப்போவதாக அவர் சூசகமாக தெரியப்படுத்தினாலும், அணி அவரை மீண்டு அழைக்கவில்லை.
CSK நிர்வாகம் மூத்த, நம்பகமான வீரரான ரெய்னாவுடன் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகவே அனைவருக்கும் தோன்றியது. ரெய்னா அணியில் இல்லாததன் தாக்கமும் அணியில் நன்றாக காணப்பட்டது. மிடில் ஆர்டரில் நின்று ஆடக்கூடிய நல்ல வீரர்கள் இல்லாமல் அணி தவித்தது. இருப்பினும், CSK அணியிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய வீர்ரகளின் பட்டியலில் ரெய்னாவின் பெயரும் உள்ளது என்றே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அணி உருவானால், அது இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க எண்ணலாம். சுரேஷ் ரெய்னாவை அழைக்காமலும் போகலாம். ஆனால் ரெய்னாவின் அனுபவத்தையும் திறமையையும் புதிய அணி கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவே விரும்பும் என்றே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: கர்ப்பிணி மனைவியின் காலணியை சுத்தம் செய்யும் கிரிக்கெட் வீரர் Virat Kohli
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR