ஆர்சிபி vs ஆர்ஆர் ஐபிஎல் 2021: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2021) தொடரின் 43 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியப் போட்டியாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேஆஃப் போட்டியில் இருக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தங்கள் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யலாம்.
டாஸ் வென்ற ஆர்சிபி:
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இன்றைய போட்டி எப்போது, எங்கே நடக்கும்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் இந்த போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
நேரடி ஒளிபரப்பு விவரம்:
போட்டியின் நேரடி ஒளிபரப்பை பல்வேறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி ஆகியவற்றில் காணலாம். போட்டியின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.
ALSO READ | இந்திய அணியில் பிளவு? விராட் கோலிக்கு எதிராக மூத்த வீரர் BCCI இல் புகார்
ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணை:
ஐபிஎல் 2021 இல், ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 10-10 போட்டிகளில் விளையாடியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 வெற்றிகளைப் பதிவுசெய்து 12 புள்ளிகளுடன் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றியும், 6 தோல்விகளை சந்தித்துள்ளது. சஞ்சு சாம்சனின் இந்த அணி 8 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர்மோதிய விவரம்:
நேருக்கு நேர் பதிவைப் பார்த்தால், இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே 23 போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆர்சிபி 11 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 முறையும் வென்றுள்ளன. இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ALSO READ | சிக்கலில் சஞ்சு சாம்சன்; வறுத்தெடுக்கும் BCCI
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR