IPL 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL 2021 விறுவிறுப்பான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும், ஐ.பி.எல் ரசிகர்களுக்கும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால், ஒரு ஐ.பி.எல் (IPL) ரசிகருக்கு மகிழ்ச்சியோடு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் காத்திருந்தது. அசோக்குமார் என்ற நபர், Indian Premier League (IPL) 'Dream Team' போட்டியில் தேர்ந்தெடுத்த அணி உண்மையான அணியுடன் கனக்கச்சிதமாக பொறுந்தியது. இதனால், ஞாயிறு, அதாவது செப்டம்பர் 26 நடந்த IPL போட்டிக்கு பிறகு, அஷோக் குமார் 'Dream Team' போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பீகாரின் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முடிதிருத்தும் நபரான அஷோக் குமார், Indian Premier League (IPL) 'Dream Team' போட்டியில் டாப் பரிசை வென்றதால், ஒரே இரவில் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரானார்.
ALSO READ: ஜட்டு ஜட்டு ஜட்டு! ஜடேஜாவின் அதிரடியில் கடைசி ஓவரில் சீஎஸ்கே வெற்றி!
“போட்டி முடிந்த பிறகு, நான் முதல் இடத்தில் வந்து ஒரு கோடி ரூபாய் வென்றேன். போட்டி முடிந்த உடனேயே அதிகாரப்பூர்வ அழைப்பும் வந்தது. அடுத்த இரண்டு நாட்களில் ரூ .70 லட்சம் என் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டது. வரிகள் கழித்த பிறகு எனக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டதும் அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை" என்று அசோக் குமார் கூறினார்.
மதுபனியின் அந்தர்தாண்டி தொகுதியில் உள்ள நானூர் சவுக்கில் அசோக்கிற்கு முடிதிருத்தும் கடை உள்ளது. அவர் பல ஆண்டுகளாக 'ட்ரீம் டீம்' போட்டியில் பங்கேற்று வருகிறார். ஆனால் முதல் முறையாக இப்போதுதான் அவருக்கு ஒரு பெரிய ஜாக்பாட்டாக இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது.
"நுழைவு கட்டணமாக ரூ .50 செலுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை நான் தேர்வு செய்தேன். எனக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. போட்டி முடிந்தபோது, நான் தேர்ந்தெடுத்திருந்த அணி மிகச்சிறப்பாக விளையாடி இருந்தது. அந்த அணிதான் நான் போட்டியை வெல்ல உதவியது” என்றார் அசோக் குமார்.
"நான் முடிதிருத்தும் வேலையை நேசிக்கிறேன். அதையே தொடர்ந்து செய்வேன். எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகை கொண்டு, நான் முதலில் என் கடன்களை அடைப்பேன். அதன் பிறகு என் குடும்பத்துக்காக ஒரு வீட்டைக் கட்டுவேன்” என்று தெரிவித்தார் அசோக்.
ALSO READ: ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR