IPL 2020: தல தோனியுடன் UAE-க்கு புறப்பட்டது CSK டீம்!!

செப்டம்பர் 19 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக (IPL 2020) கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் (CSK) மற்ற வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்.

Last Updated : Aug 21, 2020, 06:49 PM IST
  • தோனி மற்றும் மற்ற CSK வீரர்கள் சென்னையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று புறப்பட்டனர்.
  • 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து CSK IPL கோப்பையைக் கைப்பற்றியது.
  • கடந்த ஆண்டு, CSK, ஐபிஎல்லில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
IPL 2020: தல தோனியுடன் UAE-க்கு புறப்பட்டது CSK டீம்!!  title=

செப்டம்பர் 19 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக (IPL 2020) கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் (CSK) மற்ற வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனர். IPL போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடக்கவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில், சமீபத்தில் சர்வதெச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற எம் எஸ் தோனி (MS Dhoni) மற்றும் அவரது மற்ற தோழர்கள் சென்னையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் படத்தை வெளியிட்டது.

"# Yellove on the move! #Whistle Podu” ஆகிய சொற்றொடர்களுடன் CSK படங்களை பகிர்ந்தது.

தனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தோனி, கேமராவிற்கு அளித்த போசில் துடிதுடிப்பான பாணியில் காணப்பட்டார். அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா (Suresh Raina)  மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் துபாய்க்கு புறப்படும்போது முகக்கவசத்துடன் காணப்பட்டனர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விமானத்தில் ஏறும்போது சிரித்த வண்ணம் சென்றார்.

முன்னதாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, தோனி மற்றும் CSK-வின் பிற வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். இந்த முகாம் நேற்று முடிவடைந்தது.  இந்த வாரம் முழுவதும் முகாம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.

ALSO READ: IPL 2020: CSK அணியுடன் வெள்ளியன்று துபாய் செல்லமாட்டார் ஹர்பஜன் சிங்!! விவரம் உள்ளே!!

முன்னதாக, பயிற்சி முகாமில் பங்குகொள்வதற்கு முக்கர், வீரர்கள் அனைவரும் கட்டாய COVID-19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முடிவுகள் எதிர்மறையாக வந்தவுடன்தான் முகாமுக்கு அனுமதிக்கப்பட்டனர்.  விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி சனிக்கிழமை, 74 வது சுதந்திர தினத்தன்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னாவும் தனது முன்னாள் இந்திய கேப்டனைப் பின்தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு தான் ஓய்வு பெறுவதை அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தேசிய அணிக்காக தோனி கடைசியாக தோன்றினார்.

இரண்டு ஆண்டுகள் நீக்கிவைகப்பட்டு 2018 ஆம் ஆண்டு IPL விளையாட்டுகளில் மீண்டும் வந்த CSK அணியை அவ்வாண்டே தோனி வெற்றியை நோக்கி வழி நடத்தினார். முன்னதாக, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து CSK IPL கோப்பையைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம். கடந்த ஆண்டு, CSK, ஐபிஎல்லில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இவ்வாண்டு இன்னும் ஒரு படி முன்னே போய் CSK கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருகிறார்கள். 

ALSO READ: IPL இல் சாம்பியன் ஆகாத இந்த 3 அணிகள், காரணம் என்ன?

Trending News