சிஎஸ்கே: வைரலாகும் எம்.எஸ் தோனியின் பார்க்கிங் ஷாட் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2018, 05:22 PM IST
சிஎஸ்கே: வைரலாகும் எம்.எஸ் தோனியின் பார்க்கிங் ஷாட் வீடியோ title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 

இணையத்தில் வைரலாகும் சுரேஷ் ரெய்னா-வின் புதிய பாடல் -வீடியோ!

ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் நேற்று பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்கள். இவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டோ

பயிற்சியில் போது சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி வலை பயிற்சியின் போது அடித்த சிக்ஸ் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் "பார்க்கிங்கில் இருக்கும் பந்தை எடுத்து வாருங்கள்" என்று ட்விட் போட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Trending News