10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியின் 8வது லீக் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- வாட்சன் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனேயை வீழ்த்தியது.
இரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியுள்ளன. பஞ்சாப் 10 போட்டியிலும், பெங்களூர் 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.