ஐபிஎல் 2017, போட்டி 53: இரவு 8 மணிக்கு கொல்கத்தா மற்றும் மும்பை பலப்பரீட்சை

Last Updated : May 13, 2017, 12:58 PM IST
ஐபிஎல் 2017, போட்டி 53: இரவு 8 மணிக்கு கொல்கத்தா மற்றும் மும்பை பலப்பரீட்சை title=

இன்று இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்

மும்பை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 118 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 13 ஆட்டத்தில், 8 வெற்றிகள், 5 தோல்வி களுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 

இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன. மும்பை தனது கடைசி இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே வேளையில் கொல்கத்தா அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.

இரு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், மிட்செல் ஜான்சன், பும்ரா, மிட்செல் மெக்லெனஹான், நிகோலஸ் பூரன், கே.கவுதம், கான் ஷர்மா, சவுரப் திவாரி, ஏஸ்லா குணரத்னே, குல்வன்ட் கெஜ்ரோலியா

Trending News