டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்து உள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
புனே சூப்பர் ஜெயன்ட் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி அடைந்துள்ளது. கடைசியாக வலுவான மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளை பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் 131 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அதை வைத்து கொண்டு பெங்களூருவை 49 ரன்களுக்குள் மடக்கி பிரமிக்க வைத்தனர். கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் சவால் தரக்கூடும்.
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், ஷெல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.