தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பின்னர், இந்திய மகளிர் இன்றைய முதல் டி20 போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொன்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி, ஸ்னிவெஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய இந்தியா ஆட்டத்தின் 18.5 வது பந்தில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.
1st T20I: India win by 7 wickets with seven balls to spare #SAvIND
— BCCI Women (@BCCIWomen) February 13, 2018
இந்திய அணி தரப்பில் மித்தாலி ராஜ் 54*, வேதா கிருஷ்ணமூர்த்தி 37* ரன்கள் எடுத்தனர்!
இந்நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது!