INDvsWI 1st T20: மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் அபாரமாக விளையாடிய சுப்மான் கில் 98 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக் ஒர்க் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது டி20 தொடரில் ரோஹித் சர்மா, பந்த், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் படிக்க | Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு
இந்நிலையில் டி20 தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 16 பேர் கொண்ட மிகவும் பலம் வாய்ந்த அணியை தற்போது மேற்கிந்திய தீவுகள் அறிவித்துள்ளது. ஜூலை 29 தொடங்கும் டி20 போட்டிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் இடதுகை அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரோன் ஹெட்மியருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி: நிக்கோலஸ் பூரன் (c & wk), பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்ஜாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஹேடன் வால்ஷ், அக்கேல் ஹொசைன், ஷாமின் ப்ரோக், ஷாமின் ப்ரோக் பால்ஸ் டிரேக்ஸ், டெவோன் தாமஸ்
இந்தியா அணி: ரோஹித் சர்மா (C), ரிஷப் பந்த் (WK), தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிச்சந்திரன் படேல் ஐயர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், இஷான் கிஷன்
மேலும் படிக்க | 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது - ரிக்கி பாண்டிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ