INDvsWI: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.    

Written by - RK Spark | Last Updated : Aug 1, 2022, 10:29 AM IST
  • இன்று நடைபெறுகிறது இரண்டாவது டி20 போட்டி.
  • 2-0 என்று வெல்ல இந்திய அணி தயார் நிலை.
  • இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
INDvsWI: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்?  title=

டிரினிடாட்டில் நடந்த முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த பிறகு, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி விளையாட உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற இந்தியா தயராக உள்ளது. ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வெல்ல மேற்கிந்திய தீவுகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  முதல் டி20 போட்டியில் இந்திய அணி ரவி பிஷ்னோய், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.  அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அகேல் ஹொசைனில் என்ற ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே விளையாடியது. 

மேலும் படிக்க | 20 ஓவர் உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?

முதல் டி20 போட்டியில் பிஷ்னோய், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்ந்து ஐந்து விக்கெட்டுகளைப் கைப்பற்றி இருந்தனர்.  அதே சமயத்தில் மேற்கிந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹொசைன் தனது நான்கு ஓவர்களில் 1-14 எடுத்தார். இது தவிர, மேற்கிந்திய தீவுகள் பீல்டிங்கிலும் மோசமாக செயல்பட்டது.  கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணி எளிதாக்க வென்று இருந்தது.  இவர்கள் இருவரின் சிறப்பான பேட்டிங்கினால் 190 ரன்களை இந்தியா குவித்தது.  இருப்பினும் கே.எல். ராகுல் இல்லாத இடத்தை நிரப்ப இந்திய அணி தடுமாறி வருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ரிஷப் பந்த் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார்.  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் ரோஹித்துடன் களமிறங்கினார்.  சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுவதைத் தவிர, மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து, வெற்றியை எளிதாக்கினர்.  மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.  ஷிம்ரோன் ஹெட்மையர் அணிக்கு திரும்பிய போதிலும், பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. 

மேலும் படிக்க | முதல் முறையாக இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பு! மகிழ்ச்சியில் ஐபிஎல் வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News