இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்-ல் நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சிகர் தவான் 72(39) குவித்து அணிக்கு பலம் சேர்த்துள்ளார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது இதனால் இந்தியா 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்ர தென்னாப்பிரிக்கா களம்இறங்கியது...
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தடுமாறி வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து வெளியேறினர். எனினும் ரீஸா ஹெண்டிரிக்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார்.
பின்வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது..
#TeamIndia win the 1st T20I by 28 runs.
1-0 up in the three-match T20I series.#SAvIND pic.twitter.com/60uU74zs8w
— BCCI (@BCCI) February 18, 2018
இதனையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!