ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்பர்ன் மைதானத்தில் அதிகாலை துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹனுமா விஹாரி 8(66) ரன்களும், மயங்க் அகர்வால் 76(161) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
பின்னர் சேதுஷ்வர் புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். நேற்று முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. சேதுஷ்வர் புஜாரா* 68(200) மற்றும் விராட் கோலி* 47(107) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய புஜாரா மற்றும் விராட் சதம் அரைசதம் அடித்தனர். புஜாரா டெஸ்ட் போட்டியில் தனது 17வது சதத்தை 280 பந்துகளில் பூர்த்தி செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதிக பந்துகளில் சதம் அடுத்த இந்திய வீரர்களில் புஜாரா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் இடத்தில் ரவிசாஸ்திரி உள்ளார். இவர் 1992 ஆம் ஆண்டு 307 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Oh what a feeling!
17th Test ton for @cheteshwar1 #TeamIndia #AUSvIND pic.twitter.com/1RIaLiJa4W— BCCI (@BCCI) December 27, 2018
பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவுதாக புஜராவும் இணைந்துள்ளார். மெல்பர்ன் மைதானத்தில் 1999 ஆம் ஆண்டு டெண்டுல்கர் (116), 2003 ஆம் ஆண்டு சேவாக் (195), 2014 ஆம் ஆண்டு கோலி (169), 2014 ஆம் ஆண்டு ரஹானே (147), தற்போது புஜாரா ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியை பொருத்த வரை பூஜார இதுவரை 67 போட்டிகளில் விளையாடி 5230 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 17 சதமும், 20 அரை சதமும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன்கள் 206* ஆகும்.