இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக மூத்த வீரர் ஆங்கிலோ மேத்திவ்ஸ் 113(128) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக லஹிரு திருமண்னே 53(68) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பூம்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், ஹார்டிக் பாண்டயா, ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
India finish the #CWC19 group stages with a win!
Rohit Sharma and KL Rahul's centuries made the chase into a cruise after Jasprit Bumrah's 3/37 kept Sri Lanka to 264/7#SLvIND pic.twitter.com/F8dNE0jSLe
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
போட்டில் சுவாரசியமான விஷயமாக இலங்கையின் தரப்பில் வீழ்ந்த முதல் நான்கு விக்கெட்டுகளில் மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு இருந்தது.
இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 111(118), ரோகித் ஷர்மா 103(94) ரன்கள் குவித்து அபார துவக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி 34*(41) குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆட்டத்தின் 43.3-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட ரிஷாப் பன்ட் இன்றைய போட்டியிலும் 4(4) என்னும் குறைந்த ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இலங்கை அணி தரப்பில் தனது இறுதி உலக கோப்பை போட்டியில் விளையாடிய லஷித் மலிங்கா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் இன்று நடைப்பெற்று வரும் மற்றொரு (ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா) போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்தால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்., இல்லையெனில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.