மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வெற்றி பெற்றது!
மேற்கிந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 67(51), சிகர் தவான் 23(16) ரன்கள் குவித்து வெளியேற, இவர்களை தொடர்ந்த வந்த கோலி 28(23), ரிசாப் பன்ட் 4(5), மனிஷ் பாண்டே 6(8) ரன்கள் குவித்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய குர்ணல் பாண்டயே 20*(13), ரவிந்திர ஜடேஜா 9*(4) ரன்களுடன் களத்தில் நின்றனர்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. துவக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற ரோவன் போவல் அதிரடியாக விளையாடி 54(34) ரன்கள் குவித்தார். எனினும் ஆட்டத்தின் 15.3-வது பந்தை எட்டிய நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போதைய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.
Play has been called off due to rain. We win by an unassailable lead of n the three m es.#WIvIND pic.twitter.com/ijcicFwsq3
— BCCI (@BCCI) August 4, 2019
கிறன் பொல்லாற்ட் 8(8), ஹெட்மையர் 6(4) ரன்களுடன் களத்தில் இருந்தனர். பின்னர் மோசமான வானிலை நீடித்த நிலையில் ஆட்டம் நிறத்தப்பட்டது. DLS முறைப்படி இந்திய 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.