IND vs SL, Virat Kohli Century: இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அடுத்து, டி20, ஒருநாள் தொடரில் விளையாடின. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற முன்னிலை வென்றது. இதையடுத்து, சம்பிரதாய முறையில் இன்று திருவனந்தபுரத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்கள் ரோஹித் - கில் ஜோடி அதிரடியை கைக்கொண்டது. 95 ரன்களை குவித்த இந்த பார்ட்னர்ஷிப்பை சமிகா கருணாரத்னே பிரித்தார். ரோஹித் 42 ரன்களில் இருக்கும் போது ஆட்டமிழக்க, விராட் கோலி 16ஆவது ஓவரில் களம் புகுந்தார்.
Mighty Maximum - SIX from Virat Kohli
Live - https://t.co/q4nA9Ff9Q2 #INDvSL @mastercardindia pic.twitter.com/R3CzXTWBT5
— BCCI (@BCCI) January 15, 2023
கில் ஒருபுறம் பவுண்டரியாக குவிக்க, விராட் கோலியும் போட்டிப்போட்டு கொண்டு ரன்களை குவித்தார். சுப்மன் கில் சதத்தை பதிவு செய்து 116 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம். ஆனால், விராட் கோலி அடங்கவில்லை. தொடர்ந்து, பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்து அதிரடி காட்டினார். முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததை தொடர்ந்து, இந்த மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.
தொடர்ந்து, 150 ரன்களை தாண்டிய விராட், இந்திய அணியின் ஸ்கோரை அதிகரிக்க செய்தார். 110 பந்துகளில் 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என மொத்தம் 166 ரன்களை குவித்தார், விராட். மற்றவர்கள் சொற்ப ரன்களை மட்டும் குவிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. மேலும், 2017, 2018, 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் ஜன. 15ஆம் தேதி அன்று விராட் கோலி சதம் அடித்துள்ளதாக கூறப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Take a bow, Virat Kohli
Live - https://t.co/muZgJH3f0i #INDvSL @mastercardindia pic.twitter.com/7hEpC4xh7W
— BCCI (@BCCI) January 15, 2023
அதாவது, ஒருநாள் போட்டிகளில், அதுவும் இந்திய மண்ணில் அதிக சதங்களை (20 சதங்கள்) அடித்த சாதனையை சச்சின் வைத்திருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர்தான் சமன் செய்தார். தற்போது சொந்த மண்ணில் அதிக ஒருநாள் சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்தவர் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்தார். இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவை பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் இப்படி சொல்லிட்டாரே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ