IND VS SL: 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 06:57 AM IST
IND VS SL: 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா title=

இந்தியா vs இலங்கை: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேடிங்க செய்தது. 

முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் (India vs Sri Lanka) 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், ஷிகர் தவான் (Shikhar Dhawan) 46 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி சில ஓவர்களில் சிறிது அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

ALSO READ | IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்டியா என புகழாரம்

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அவிஷிங்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா அதிரடியாக ரன் குவித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடியால் 23 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அவிஷிங்கா 26 ரன்களுக்கும், மினோத் பனுகா 10 ரன்களுக்கும் வெளியேறினர்.

இதன் பின்னர் வந்த வீரர்களில் சாரித் அசலங்கா மட்டும் தான் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார். இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவரில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, ஹார்டிக் பாண்ட்யா, ராகுல் சாஹர், சேதன் சாகரியா, கிருஷ்ணப்பா கவுதம், நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சய, துஷ்மந்தா சாமிரா.

ALSO READ | இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News