IND Vs SA 2nd T20I: ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்காவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பெற்ற முதல் டி20 தொடர் வெற்றி இதுவாகும். இந்தியாவில் நடந்த முந்தைய மூன்று தொடர்களில், தென்னாப்பிரிக்கா ஒரு முறை வென்றது, மீதமுள்ள இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களைத் பறக்க விட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் நடுவே மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸின் 12வது ஓவரில் ரோஹித் ஷர்மா பெவிலியன் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது அதிக ஈரப்பதம் காரணமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியது. அவர் ஆரம்பத்தில் இரத்தத்தை நிறுத்த துண்டைப் பயன்படுத்தினார், ஆனால் இறுதியில் பெவிலியன் திரும்பி சிகிச்சை மேற்கொண்டார். அவருடன் அருகில் தினேஷ் கார்த்திக் இருந்து என்ன ஆனது என்பதை பார்த்து கொண்டிருந்தார். பின்பு மீண்டும் மைதானத்திற்குள் வந்து பீல்டிங் செய்தார்.
Dedication
Rohit sharma kept giving instructions even after nose bleeding#INDvSA #RohitSharmapic.twitter.com/wtnuPZwHiI— crickad(@cricka) October 2, 2022
மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்
2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார், இருப்பினும் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரோஹித் சர்மா 43 ரன்களில் கேசவ் மஹாராஜிடம் ஆட்டமிழந்தார். 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுல் வெளியேறினார். பின்பு விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். சூர்யகுமார் 22 பந்துகளில் 61 ரன்களில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அரை சதம் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.
In addition to the run fest, a special moment as we sign off from Guwahati. #TeamIndia | #INDvSA | @imVkohli | @DineshKarthik pic.twitter.com/SwNGX57Qkc
— BCCI (@BCCI) October 2, 2022
இவ்வளவு பெரிய ஸ்கோரைத் துரத்திய தென் ஆப்ரிக்கா டெம்பா பவுமா மற்றும் ரிலீ ரோசோவ் ஆகியோரது விக்கெட்களை முதலில் இழந்தது, அர்ஷ்தீப் சிங் இரு பேட்ஸ்மேன்களையும் ஆட்டமிழக்கச் செய்தார். எய்டன் மார்க்ரம் சில பெரிய ஷாட்களை விளையாடி 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106(47), குயின்டன் டி காக் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ