இந்தியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

Last Updated : Jul 15, 2018, 10:27 AM IST
இந்தியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து! title=

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 113 ரன்களும், இயான் மோர்கன் 53 ரன்களும், டேவிட் வில்லே 50 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

அடுத்தடுத்து வந்த விராட் கோஹ்லி 45 ரன்களும், ரெய்னா 47 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து சற்று கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையையும் பெற்றுள்ளது.

 

Trending News