டி20 உலக கோப்பை : இந்தியா - வங்கதேசம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரோகித் சர்மாவுக்கு சிக்கல்

India vs Bangladesh T20 World Cup rain : இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இப்போட்டி ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2024, 09:49 PM IST
  • இந்தியா - வங்கதேசம் நாளை மோதல்
  • ஆன்டிகுவா மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு
  • போட்டி தடைபட்டால் இந்திய அணிக்கு சிக்கல்
டி20 உலக கோப்பை :  இந்தியா - வங்கதேசம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரோகித் சர்மாவுக்கு சிக்கல் title=

T20 உலகக் கோப்பை 2024 தொடரின் முதல் சுற்று குரூப் போட்டியில் பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி சூப்பர்-8 இல் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிக் கணத்தை தொடங்கியிருக்கிறது இந்தியா. அடுத்ததாக ஜூன் 22 சனிக்கிழமையன்று இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு என்ன? வானிலை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!

வங்கதேசம் தோல்வி

வங்கதேசம் அணி இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும், அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் 8 சுற்று போட்டிக்கு முன்னேறியது. இப்போது, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ள குரூப்பில் இடம்பிடித்திருக்கும் வங்கதேசம், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். அதேநேரத்தில் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டி வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிடும்.  

சூப்பர்-8 போட்டியில் இந்தியா வெற்றி

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வி அடையவில்லை. அவர்கள் குரூப் சுற்றில் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்தனர். இந்திய அணியின் கடைசி போட்டி மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது. சூப்பர் 8-ல் ரோஹித் சர்மா தலைமையிலான அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இப்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணி வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

ஆன்டிகுவாவில் வானிலை எப்படி இருக்கும்?

ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-வங்காளதேச டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8, குரூப்-1 போட்டியின் வானிலை குறித்து பேசுகையில், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்யூவெதர் அறிக்கையின்படி, சனிக்கிழமை மழைக்கான வாய்ப்பு 40 சதவீதமாகவும், இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறு சுமார் 24 சதவீதமாகவும் உள்ளது. பகலில் மணிக்கு சுமார் 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது தவிர, மேகமூட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு 41 சதவீதம் என்றும், இரண்டு மணி நேரம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடி சதம் அடித்துள்ள 6 வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News