இந்தியா - பாகிஸ்தான் மோதல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் இசை விருந்து ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. மேலும், இந்திய முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள், சச்சின் தெண்டுல்கர், அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.
அகமதாபாத் பிட்ச் எப்படி?
இதனால் இப்போட்டி ரசிகர்களுக்கு கண்கவர் விருந்தாக இருக்கும். அதற்கேற்ப மைதானமும் பேட்டிங்கிற்கு உகந்த மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற உலக கோப்பை முதல் போட்டியில் கூட இங்கிலாந்து அணி நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே வெற்றிகரமாக எட்டியது. இதனால் ரன் மழைக்கு அகமதாபாத்தில் பஞ்சம் இருக்காது.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
டாஸ் வெற்றி பெற்றால் என்ன செய்யணும்?
இதனால் இரு அணிகளும் டாஸ் வெற்றி பெற்றால் பந்துவீச்சையே தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி முதல் இரு போட்டிகளிலும் சேஸிங்கிலேயே அபாரமாக பேட்டிங் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியும் கடந்த போட்டியில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சேஸிங்கில் வென்றுள்ளது. இதனால் இரு அணிகளும் பேட்டிங்கிற்கு உகந்த இந்த மைதானத்தில் டாஸ் வெற்றி பெற்றால் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிகம் விரும்புவார்கள். இரவு நேரத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை இரு அணிகளும் கருத்தில் கொள்வார்கள்.
இந்திய அணிக்கு சாதகம்
அகமதாபாத் பிட்சை பொறுத்தவரையில் இந்திய அணி இங்கு ஒருநாள் போட்டிகளில் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் இந்திய அணி அதிக வெற்றிகளையே பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்த வெற்றிப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம். பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை ஒருசில மாற்றங்கள் இந்திய அணியில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ