ஐசிசி தரவரிசை - இந்தியாவுக்கு 3ஆவது இடம்

ஐசிசி வெளியிட்டிருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 23, 2022, 05:18 PM IST
  • ஐசிசி ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது
  • அதில் நியூசிலாந்து 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது
  • இந்தியா 111 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது
 ஐசிசி தரவரிசை - இந்தியாவுக்கு 3ஆவது இடம் title=

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசையை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தன் மூலம் இந்திய அணி 111 புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 

முதல் இடத்தில் 124 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் இரண்டாவது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளன. செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. இதில் வெல்லும்பட்சத்தில் இந்திய அணி முதலிடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

India

ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியல்:

 நியூசிலாந்து - (124 புள்ளிகள்), இங்கிலாந்து - (119 புள்ளிகள்), இந்தியா - (111 புள்ளிகள்), பாகிஸ்தான் - (107 புள்ளிகள்), ஆஸ்திரேலியா - (101 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா - (101 புள்ளிகள்), வங்கதேசம் - (92 புள்ளிகள்), இலங்கை - (92 புள்ளிகள்), மேற்கு இந்திய தீவுகள் - (71 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் - (69 புள்ளிகள்).

 

முன்னதாக, நேற்று ஜிம்பாப்வேவுடன் இந்திய அணி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் சதத்தின் துணையோடு 50 ஓவர்களில் 289 ரன்களை எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராசா அடித்த சதத்தின் துணையோடு 276 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போர் எப்போது ஆரம்பித்தது தெரியுமா?

மேலும் படிக்க | இந்திய அணியை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே! தப்பித்த டீம் இந்தியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News