IND vs SL: கடைசி ஓவர் திக் திக்... மாஸ் பிளான் போட்டு ஜெயித்த இந்தியா! ஷிவம் மாவி அபாரம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில், பரபரப்பான கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் களமிறங்கிய ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2023, 11:12 PM IST
  • இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி
  • 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
  • அறிமுக போட்டியில் கலக்கிய ஷிவம் மாவி
IND vs SL: கடைசி ஓவர் திக் திக்... மாஸ் பிளான் போட்டு ஜெயித்த இந்தியா! ஷிவம் மாவி அபாரம் title=

இந்தியா பேட்டிங்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக பின்வரிசையில் விளையாடிய அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்தனர். ஓப்பனிங் இறங்கிய இஷான் 37 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி தோல்வி

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது. கேப்டன் தஷூன் ஷானகா, குஷால் மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, கருணரத்னே உள்ளிட்டோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் அந்த அணிக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் அந்த ஓவரை வீசினார். 3வது பந்தில் சிக்சர் அடிக்கப்பட்டபோதும் அருமையாக வீசிய அவர், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பெரும்பங்காற்றினார்.   

மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் பும்ரா! பிசிசிஐ அதிரடி அறிவிப்புக்கு பின்னணியில் இருக்கும் கணக்கு

ஷிவம் மாவி அபாரம்

இந்த போட்டியில் இந்திய அணிக்காக சுப்மான் கில் மற்றும் சிவம் மாவி ஆகியோர் முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியில் களமிறங்கினர். பேட்டிங்கில் கில் சொதப்பினாலும், ஷிவம் மாவி அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய ஷிவம் மாவி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவம் மாவி ஒருபுறம் அசத்த, உம்ரான் மாலிக்கும் துல்லியமாக பந்துவீசினார். அவரின் 4வது ஓவரில் 155 கி.மீ வேகத்தில் வேக தாக்குதலை தொடுத்தார். அதேபோல் பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்த அக்சர் படேல், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். கடைசி ஓவரை துல்லியமாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக மாறினார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் படிக்க | ’நல்லா விளையாடியும் இடமில்லை’ என்டு கார்டு போட்ட டிராவிட்.. விரக்தியில் தவான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News