IND vs AFG மேட்ச் நடக்கும் அபுதாபி பிட்ச் யாருக்கு சாதகம்? Toss ரொம்ப முக்கியம்!

Abu Dhabi Pitch Report: அபுதாபி மைதானத்தில் (Sheikh Zayed Stadium, Abu Dhabi) நடந்த சூப்பர்-12 சுற்று 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 3, 2021, 01:17 PM IST
IND vs AFG மேட்ச் நடக்கும் அபுதாபி பிட்ச் யாருக்கு சாதகம்? Toss ரொம்ப முக்கியம்! title=

Abu Dhabi Pitch Report: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியின் வானிலை முன்னறிவிப்பு மற்றும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவோம். இன்று இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் டி20 உலகக் கோப்பை 2021 இல் (T20 World Cup 2021) போட்டியிடுகின்றன. இரு அணிகளும் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்திய அணி சூப்பர்-12ல் (Super-12) கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து குரூப்-2 புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்திருக்க இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். அதே சமயம் ஆப்கானிஸ்தான் (Afghanistan Cricket Team) இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றிக் கொடியை உயர்த்தியுள்ளது. 4 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி 2வது இடத்தில் உள்ளது. குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியின் பிட்ச் எப்படி இருக்கும் (Sheikh Zayed Stadium Pitch Report)
அபுதாபி மைதானத்தில் (Sheikh Zayed Stadium, Abu Dhabi) நடந்த சூப்பர்-12 சுற்று 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம். வேகப்பந்து வீச்சாளர்களைத் தவிர, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்க முடியும். இந்த மைதானத்தில் ரன் குவிக்க பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. இருப்பினும், பவர்பிளேயில் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை எடுக்க முடியும். இதுவரை ஒரு முறை மட்டுமே இங்கு 180 என்ற எண்ணிக்கை கடந்துள்ளது. 

ALSO READ |  இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

ஷேக் சயீத் ஸ்டேடியத்தில், 150-160 ஸ்கோரை வரை எடுக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மைதானத்தில் இலக்கை விரட்டிய அணி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. போட்டியில் பனி காரணியும் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

இன்று அபுதாபியில் வானிலை எப்படி இருக்கும் (Today Weather Forecast Abu Dhabi)
அபுதாபியில் புதன்கிழமை பகலில் வெப்பமான வானிலை இருக்கும். ஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (India vs Afghanistan) இடையேயான போட்டி மாலையில் தொடங்கும் போது, ​சற்று ​நிவாரணம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீரர்கள் ஈரப்பதத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போட்டியின் போது வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் சுமார் 65 சதவீதம் இருக்கலாம். மணிக்கு 13 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

வானிலை தெளிவாக இருக்கும், மழைக்கு 2% மட்டுமே வாய்ப்பு உள்ளது. மேலும் இதே மைதனத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபுதாபியில் ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. மறுபுறம், இந்திய அணி (Indian Cricket Team) தற்போதைய சுற்றில் முதல் முறையாக இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாடுகிறது.

ALSO READ |  IND vs AFG: அணியில் மாற்றம் வருமா? இந்த 11 வீரர்கள் இன்று களம் இறங்கலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News