IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?

IND vs PAK இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது.    

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2022, 06:37 AM IST
  • இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது.
  • இந்திய நேரப்படி மதியம் 1.30க்கு போட்டி தொடங்குகிறது.
  • ரசிகர்கள் போட்டியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?   title=

உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.  உலக கோப்பை டி20 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்த முறை லீக் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது.  தற்போது லீக் போட்டிகள் தொடங்கி நடைபெறு வருகிறது.  அந்த வகையில் இன்று ஞாயிறுக்கிழமை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.  கடைசியாக இரு அணிகளும் ஆசிய கோப்பையில் மோதிக்கொண்டன.
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின் டாஸ் எத்தனை மணிக்கு?

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு.

மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் போட்டில் இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி எந்த நேரத்தில் தொடங்குகிறது?

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியை எந்த சேனலில் பார்ப்பது?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்க்கலாம்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக சந்தித்தபோது என்ன நடந்தது?

இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2022 துபாயில் நடந்த ஆசிய கோப்பையில் சந்தித்தன, அங்கு இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன.

இந்தியாவின் கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா (c), கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (WC), அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், அரஷ்தீப் சிங்

பாகிஸ்தான் கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: முகமது ரிஸ்வான் (WK), பாபர் ஆசம் (c), ஃபகார் ஜமான், முகமது நவாஸ், இப்திகார் அகமது, ஷான் மசூத், ஆசிப் அலி, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

மேலும் படிக்க | ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - சூடுபிடிக்க காத்திருக்கும் சூப்பர் 12 சுற்று!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News