IND vs ENG: 4வது டெஸ்டில் பும்ரா விலகல்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 20, 2024, 11:45 AM IST
  • வெள்ளிக்கிழமை தொடங்கும் 4வது டெஸ்ட்.
  • பும்ராவிற்கு ஓய்வு வழங்க முடிவு.
  • பணிச்சுமை காரணமாக ஓய்வு பெற உள்ளார்.
IND vs ENG: 4வது டெஸ்டில் பும்ரா விலகல்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!  title=

IND vs ENG: ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்தடுத்து நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவரது பந்துவீச்சு அணிக்கு வெற்றியை பெற்று தந்தது.  இந்நிலையில், பணிச்சுமை காரணமாக ராஞ்சியில் நடக்கவுள்ள 4வது டெஸ்டில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.  

மேலும் படிக்க | IPL 2024: சர்ஃபராஸ் கானின் சேவை... எந்த ஐபிஎல் அணிக்கு தேவை...?

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் இடம் பிடித்தார்.  2வது டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் பும்ரா.  இந்தத் தொடரில் பும்ரா 80.5 ஓவர்கள் பந்துவீசி 13.65 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  பும்ரா அணியில் இல்லாத நிலையில், ராஞ்சி ஆடுகளத்தின் தன்மையை மனதில் கொண்டு இந்தியா மாற்று வீரர்களை தேர்வு செய்ய உள்ளது. பும்ராவிற்கு பதிலாக கூடுதல் ஸ்பின்னர் உடன் செல்லுமா அல்லது வேகப்பந்து வீச்சாளருடன் செல்லுமா என்பது ஆடுகளத்தில் தன்மை பொறுத்து முடிவு செய்யப்பட உள்ளது.  ராஞ்சி டெஸ்டில் பும்ராவிற்கு பதில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்களை பற்றி பார்ப்போம். 

முகேஷ் குமார்

பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகேஷ் குமாரால் சிறப்பான பந்துவீச்சை கொடுக்க முடியவில்லை.  அந்த டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே அவரால் வீழ்த்த முடிந்தது.  பின்னர் ரஞ்சி டிராபி லீக் போட்டியில் விளையாட அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பீகாருக்கு எதிராக 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். தற்போது ரஞ்சியில் சிறப்பாக விளையாடி வரும் முகேஷ், பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்புள்ளது.

ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.  27 வயதான இவர் சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷுடன் சேர்ந்து, ஆகாஷ் பெங்கால் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஆகாஷ் தீப் 30 முதல் தர போட்டிகளில் 23.58 சராசரியுடன் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி அசதி உள்ளார். இதனால் இந்திய அணி இவரை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

அக்சர் படேல்/வாஷிங்டன் சுந்தர்

ராஞ்சி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி கூடுதல் ஸ்பின்னர் உடன் களமிறங்க வாய்ப்புள்ளது.  பும்ராவின் இடத்தில் அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தரை இந்தியா தேர்வு செய்யலாம். அக்சர் படேல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.  கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சுந்தர் ஒரு டெஸ்டில் கூட இடம்பெறவில்லை. இருவரும் பேட்டிங்கிலும் கூடுதல் பலம் சேர்க்க முடியும் என்பதால் இந்திய அணி யாரை தேர்வு செய்வது என்பதில் நிச்சயம் குழப்பத்தில் இருக்கும்.

மேலும் படிக்க | இந்த 4 வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News