2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஸ்டார் பேட்டர் சர்ஃபராஸ் கான் விலக வாய்ப்புள்ளது. இரானி கோப்பையில் விளையாட இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2024, 06:53 AM IST
  • இந்த வாரம் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி.
  • முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  • தொடரை வெல்ல இந்தியா மும்முரம்.
2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக! title=

சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளின் பாதியில் முடிவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் 376 ரன்கள் அடித்தது. பிறகு ஆடிய வங்கதேசம் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 287 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. ரிஷப் பந்த் மற்றும் கில் சதம் அடித்து இருந்தனர். 514 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய வங்கதேசம் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தற்போது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்த போட்டியிலும் வென்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?

இந்த தொடர் வெற்றி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ன் இறுதிப் போட்டியில் ஒரு இடத்தை உறுதி செய்ய உதவியாக இருக்கும். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் அணியை அறிவித்து இருந்த பிசிசிஐ, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் அதே அணியை அறிவித்துள்ளது. இருப்பினும், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே அணியில் உள்ள ஒரு முக்கிய வீரர் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான தகவலின்படி, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படலாம்.

ஏன் சர்பராஸ் கான் விடுவிக்கப்பட உள்ளார்?

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் விளையாடவில்லை. அவருக்கு பதில் கேஎல் ராகுல் விளையாடினார். அவர் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 22 ரன்கள் அடித்து அவுட் ஆகாமலும் இருந்தார். 2வது டெஸ்டில் இந்திய அணி பிளேயிங் 11ல் பெரிய மாற்றங்கள் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) நடத்தும் 2024 ஆம் ஆண்டு இரானி கோப்பையில் மும்பைக்காக விளையாட இந்திய அணியில் இருந்து சர்ஃபராஸ் கான் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இருப்பினும் இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி லக்னோவில் தொடங்குகிறது. எனவே கான்பூரிலிருந்து லக்னோவிற்கு பயணம் செய்வது சர்பராஸ் கானுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. "தற்போது அணியில் உள்ள ஒரே மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான். துருவ் ஜூரல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், அக்சர் படேல் ஒரு ஆல்-ரவுண்டர். இரானி கோப்பை அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சர்பராஸ் கான் பங்குபெறுவாரா மாட்டாரா என்பது பற்றி செப்டம்பர் 30ம் தேதி முடிவு எடுக்கப்படும்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ஆர். அஷ்வின், ஆர். ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலத்தில் காத்திருக்கும் 5 அதிர்ச்சிகள்... ரோஹித் சர்மா முதல் டூ பிளெசிஸ் வரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News