IND vs AUS: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரவி சாஸ்திரியின் மகிழ்ச்சி…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கடந்த முறை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் கலந்து கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2020, 03:17 PM IST
IND vs AUS: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரவி சாஸ்திரியின் மகிழ்ச்சி… title=

இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தற்போது மும்முரமாக தயாராகி வருகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிக்கு வந்திருக்கிறார். அணிக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இந்தியா மூன்று ஒருநாள் (ODI) மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடும். நவம்பர் 27ஆம் தேதியன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கவிருக்கிறது. 

இன்று ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் ரவி சாஸ்திரி. தனது ட்வீட்டில் ரவி சாஸ்திரி "நான் மீண்டும் பணிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று எழுதியிருக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கடந்த முறை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் கலந்து கொண்டார்.

இந்திய அணி நவம்பர் 12 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்கு சென்றுவிட்டது. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளது.  நவம்பர் 14 முதல் பயிற்சி செய்யத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. 

ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களைத் தவிர, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்தியா நான்கு டெஸ்ட் தொடர்களிலும் விளையாவிருக்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கெடுப்பார். தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர், பிரசவத்தின் போது மனைவி அனுஷ்காவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு தாயகம் திரும்புகிறார்.

கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்பதற்காக கிரிக்கெட் உலகமே ஆஸ்திரேலியத் தொடரில் அதிக கவனம் செலுத்தும். 
அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீண்ட நாளுக்கு பிறகு அணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டிவிட் செய்திருக்கிறார். அந்த மகிழ்ச்சி இந்திய அணியின் வெற்றியில் பிரதிபலிக்கும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News