IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல இந்தியா தயாராக உள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி சர்வதேச டி20யாக இந்த போட்டி இருப்பதால், இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டியாக இருக்கும். இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் XIல் சில மாற்றங்களை செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் - யுவராஜ் சிங் பேச்சு!
உலக கோப்பை 2023க்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், நான்காவது போட்டியில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டராக விலையாடி வருககிறார் ஜிதேஷ் சர்மா. இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் கடைசியாக இந்தியாவுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்லில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். கடந்த இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத அவேஷ் கானும் இந்த இறுதி ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணிக்குள் வருவார் என்றும் கூறப்படுகிறது. முகேஷ் குமார் அல்லது அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ளது. நட்சத்திர இடது கை கால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்க்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அவர் விளையாட உள்ளார்.
Preps in full swing for the 3rd & Final #INDvAFG T20I
P.S. - #TeamIndia had a special visitor in the nets today @IDFCFIRSTBank pic.twitter.com/FLSKRSP4Cy
— BCCI (@BCCI) January 16, 2024
இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய கடைசி சர்வதேச போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் பார்மிற்கு வர வேண்டும் என்று அணி நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தொடருக்காக 14 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்றார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால் அவரால் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். முதல் 2 டி20 போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கில் வெற்றி பெற்றது, இரண்டு போட்டிகளிலும் ஷிவம் துபே அரை சதம் அடித்து அசத்தினார். பெங்களூரு சிறிய மைதானம் என்பதால் சிக்சர் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்ததேச இந்திய அணி: ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார்
மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ