இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி, மைதானம் மோசமாக இருந்ததால் டாஸ் போடுவது தாமதமானது. சில கால தாமத்திற்கு பிறகு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் மூன்றாவது டி20 போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது, 3 போட்டிகளில் கொண்ட டி20 போட்டியில், இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னதாக 4-1 என்ற கணக்கில், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பின்னர் தெடங்கிய டி20 தொடரின் 3 போட்டிகளில் இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த போட்டி கைவிடப்பட்டது.
The 3rd T20I against Australia has been called off due to a wet outfield. The series is drawn 1-1 #INDvAUS pic.twitter.com/mzM9dZUKzS
— BCCI (@BCCI) October 13, 2017