t20 வரலாற்றில் முதன் முறையாக Dhoni இல்லாமல் ஒரு போட்டி!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் t20 போட்டி இன்று கொல்கத்தா ஏடன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணியளவில் நடைப்பெறுகிறது!

Written by - Mukesh M | Last Updated : Nov 4, 2018, 12:32 PM IST
t20 வரலாற்றில் முதன் முறையாக Dhoni இல்லாமல் ஒரு போட்டி! title=

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் t20 போட்டி இன்று கொல்கத்தா ஏடன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணியளவில் நடைப்பெறுகிறது!

சர்வதேச t20 வரலாற்றில் முதல்முறையாக, இந்திய கிரிக்கெட் அணி டோனி இல்லாமல் 'இந்தியாவில்' விளையாடும் முதல் t20 போட்டி இப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை எளிதாக வென்ற நிலையில், 3 t20 போட்டிகள் கொண்ட தொடரினை இன்று துவங்குகிறது. இந்த t20 தொடரில் அணித் தலைவர் கோலி, டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி., ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் ஷிகர் தவான், KL ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பான்டே, ஸ்ரேயஷ் ஐயர், ரிசாப் பன்ட்(WK), குர்னல் பான்டே, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ், ஷஹபாஷ் நதீம் ஆகியோர் விளையாடுகின்றனர்.

முன்னணி வீரர்கள் இல்லை என்ற போதிலும், இந்திய அணியினை எதிர்கொள்வது மேற்கிந்திய அணிக்கு சற்று சவாலான காரியமே., 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை பேட்டியில் மேற்கிந்தியா சாம்பியன் பட்டம் வென்று இருந்தாலும், இதுதான் தான் விளையாடிய டி20 போட்டிகளில் 50% தோல்வியினை மட்டுமே தழுவியுள்ளது. உலக கோப்பையினை எதிர்கொண்ட அணியில் இருந்து ப்ரத்வெயிட் மற்றும் ராம்தீன் மட்டுமே தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளனர். இளம் வீரர்களை கொண்டு பலம் வாய்ந்த இந்திய அணியினை மேற்கிந்திய வீழ்த்துமா என்பதினை டி20 தொடர் முடிந்த பிறகே அறிய இயலும்.

இன்றைய போட்டியில்... 

  • சர்வதேச t20 வரலாற்றில் முதல்முறையாக, இந்திய கிரிக்கெட் அணி டோனி இல்லாமல் 'இந்தியாவில்' விளையாடும் முதல் t20 போட்டி இப்போட்டி இது.
  • டோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பன்ட் களம் காணுகின்றார். 2018-ஆம் ஆண்டினை பொருத்தவரையில் குறிகிய ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் ரிஷாப் பன்ட் 177.16 SR-ல் 1125 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக 2017/18-ல் நடைப்பெற்ற SMA Trophy-ல் இரண்டாவது வேகமான T20 சதத்தினை 100(32) பூர்த்தி செய்தார். அதேப்போல் உள்ளூர் போட்டியான IPL-ல் அதிகப்படியான ஒருநபர் ரன் என்றளவில் 128* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதன் காரணமாக ரிஷாப் பன்ட்-ன் பக்கள் அனைவரது கண்களும் திறும்பியுள்ளது.
  • மேற்கிந்திய அணியின் அதிரடி மட்டையாளர் பொல்லார்ட் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் தனது முதல் டி20 போட்டியினை விளையாடவுள்ளார். டி20 போட்டிகளில் பொல்லார்ட் விளையாட துவங்கி 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தான் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுகின்றார்.

Trending News